யாஷிகா ஆனந்துடன் காதலா? நடிகர் ரிச்சர்ட் விளக்கம்

Date:

தமிழில் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்தும், நடிகர் ரிஷி ரிச்சர்ட்டும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. இதன் மூலம் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின.

ரிஷி ரிச்சர்ட் காதல் வைரஸ் படம் மூலம் கதாநாயனாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து இருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற திரவுபதி, ருத்ர தாண்டவம் படங்களிலும் நடித்து இருந்தார். இவர் நடிகையும், அஜித்குமாரின் மனைவியுமான ஷாலினியின் சகோதரர் ஆவார்.

தன்னை விட 22 வயது குறைந்த யாஷிகா ஆனந்தை ரிஷி ரிச்சர்ட் காதலிக்கிறாரா என்று வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ரிஷி ரிச்சர்ட் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “நானும் யாஷிகா ஆனந்தும் காதலிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. எங்களுக்குள் காதல் இல்லை. நாங்கள் இருவரும் விஜய் பரத்வாஜ் இயக்கும் ‘சில நொடிகளில்’ என்ற படத்தில் நடித்து வருகிறோம். அந்த படத்தில் இருவரும் நடித்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தேன். அதைவைத்து இருவருக்கும் காதல் என்று வதந்தி கிளப்பி உள்ளனர்” என்றார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...