Home Blog

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் மற்றும் ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறும்.- தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கினார். அடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

இதுதவிர ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். இந்த நிலையில் விடாமுயற்சி படத்தை அடுத்து குட் பேட் அக்லி படத்தில் நடித்து வரும் அஜித்தை அடுத்தபடியாக பிரசாந்த் நீல் இயக்குவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அப்படி அஜித்தை வைத்து அவரது 64வது மற்றும் 65வது படங்களை பிரசாந்த் நீல் இயக்க உள்ளதாகவும், அந்த இரண்டு படங்களையும் கேஜிஎப் தயாரிப்பான ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் அடுத்தாண்டு 2025ல் அஜித் நடிக்கும் படத்தை பிரசாந்த் நீல் இயக்குவார் என்று கூறப்படுகிறது.

 

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே’ படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர் இயக்கி உள்ள திரைப்படம் ‘மின்மினி’. 2015ல் இந்த படம் ஆரம்பமானது. குழந்தைகளாக இருந்து இளம் பருவத்தினராக மாறியவர்களை மையமாக வைத்து இதன் கதை உருவாகி உள்ளது. இதற்காக இந்த படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்களை, இளைஞர்களாக வளரும் வரை 7 ஆண்டுகள் காத்திருந்து நடிக்க வைத்துள்ளார் ஹலிதா.

மின்மினி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இப்பட இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானின் மகளான கதீஜா பேசுகையில் ‛‛இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் நான் தயாராக இல்லை. ஆனால் ஹலிதா விடாப்பிடியாக நான் தான் இசையமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

ஒருகட்டத்தில் இந்த படத்திற்கு நான் தான் இசையமைப்பாளர் என அறிவித்த போது நிறைய டுவீட்களை பார்த்தேன். திறமையான நபர்கள் பலர் இருந்தபோதும் இவரை எதற்கு தேர்வு செய்தீர்கள் என பலரும் கமென்ட் செய்து இருந்தனர். அது என்னை மிகவும் பாதித்தது. இதற்காகவே நம் இயக்குநருக்கு நாம் பெருமை சேர்த்து கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து கடுமையாக உழைத்தேன். உங்களுக்கு பிடித்தால் ஆதரவு தாருங்கள், இல்லையென்றால் வலைதளங்களில் மோசமாக திட்டாதீர்கள்” என்றார்.

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை ஏழு சீசன்களை நிறைவு செய்துள்ளது.

விரைவில் எட்டாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதில் போட்டியாளராக கலந்து கொள்ள போவது யார் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இதோ அந்த லிஸ்ட்

1. ஜோயா

2. டிடிஎப் வாசன்

3. ரியாஸ் கான்

4. சோனியா அகர்வால்

5. பூனம் பாஜ்வா

6. குக் வித் கோமாளி அஸ்வின்

7. சுசித்ரா முன்னாள் கணவர் கார்த்திக்.

இணையத்தில் வைரலாகி வரும் இந்த லிஸ்ட் அதிகாரப்பூர்வ லிஸ்ட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் ஆசிய கோப்பை: இந்தியா வெற்றிபெற 109 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையின் தம்புள்ளவில் இன்று தொடங்கியது.

இந்நிலையில், இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

இறுதியில், பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா சார்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டும், ரேணுகா தாகூர் சிங், பூஜா வஸ்த்ராகர், ஷ்ரேயங்கா பாட்டீல் தலா 2 விக்கெட்டு வீழ்த்தினர்.

இதையடுத்து, 109 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

 

சர்வதேச தரத்தில் ஹிப்ஹாப் தமிழாவின் கடைசி உலகப் போர் – கிளிம்ப்ஸ் வீடியோ

2015 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். அதைத்தொடர்ந்து இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கவண், இமைக்கா நொடிகள் போன்ற பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இசையமைப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய முதல் படமான மீசைய முறுக்கு படத்தை அவரே எழுதி, இயக்கி நடித்தும் இருந்தார். இப்படம் மக்களிடையெ மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

அதைத்தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு மற்றும் வீரன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். கடந்த மாதம் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் பி.டி சார் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்பொழுது மீண்டும் இயக்குனர் அவதாரத்தை கையில் எடுத்து இருக்கிறார் ஆதி. ஆனால் இம்முறை இயக்குனருடன் சேர்ந்து தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுத்துள்ளார்.

அவர் அடுத்ததாக இயக்கி நடித்து இருக்கும் படத்திற்கு கடைசி உலகப்போர் என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஆதியின் ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மண்ட் தயாரித்துள்ளது. ஆதி நடிக்கும் 8 – வது திரைப்படமாக இது உருவாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.

படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. ஹிப்ஹாப் தமிழா ஒரு ஜாலியான கமெர்ஷியன் திரைப்படம் இயக்கி இருப்பார் என்று நினைத்தால், அவர் முற்றிலும் மாறுப்பட்ட உலகப்போர் கதைக்களத்துடன் ஒரு சீரியசான விஷயத்தை கையில் எடுத்துள்ளார்.

வீடியோவில் இடம் பெற்றுள்ள காட்சிகள் மற்றும் ஒளிபதிவு உலகத்தரத்தில் உள்ளது. கிராபிக்ஸ் காட்சிகள் மிக அழகாக செய்துள்ளனர். இது யாரும் எதிர் பார்க்காத ஒரு விஷயம். எம்மாதிரி திரைப்படமாக இது இருக்க போகிறது என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஜப்பானில் அனுர..

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க ஜப்பானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜப்பானிலுள்ள இலங்கையர்களுடன் பொதுக் கூட்டமொன்றிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் வெளிவிவகார குழு இந்த பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கமைய ஜப்பானின் Tsukuba நகரிலுள்ள Yatabe Citizen மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை குறித்த பொதுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதனையடுத்து ஜப்பானிலுள்ள இலங்கை வர்த்தக குழுக்களையும் அவர் சந்திக்கவுள்ளார். ஜப்பானின் அரச தரப்பு முக்கியஸ்தர்கள் பலருடனும் அனுர குமார திஸாநாயக்க கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

தேர்லை அறிவிப்பதில் தடையில்லை

22வது அரசியலமைப்பு திருத்தத்தை வர்த்தமானியில் வெளியிட்டதன் ஊடாக ஜனாதிபதி தேர்தலை அறிவிப்பதற்கு எவ்வித தடையும் இல்லையென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

திரிஷா உடன் ரொமான்ஸ் செய்யும் அஜித்.. வெளியானது விடாமுயற்சி படத்தின் Thirid Look.. இதோ

அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், பிக் பாஸ் ஆரவ், ரெஜினா காசண்டரா எனப் பல பிரபலங்கள் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது விடா முயற்சி படத்தின் thirid look வெளியாகி இருக்கிறது.

ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டி இன்று முதல்…

ஆசிய கிண்ண டி20 மகளிர் கிரிக்கெட் போட்டி இன்று (19) தம்புள்ளையில் ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி இன்று 2 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், போட்டியின் அனைத்து போட்டிகளையும் விளையாட்டு ரசிகர்கள் இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

2004 ஆம் ஆண்டு தொடங்கிய ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டி 2008 ஆம் ஆண்டு வரை ஒரு நாள் போட்டியாக நடத்தப்பட்டு, 2012 ஆம் ஆண்டு முதல் டி20 போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 8 அணிகள் பங்கேற்கும் இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டி ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் நடைபெறுகிறது.

இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்போட்டிகள் 2 குழுக்களாக நடைபெறவுள்ளது.

இதன்படி ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகளும், பீ பிரிவில் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

போட்டிகளின் முதல் நாளில், நேபாளம் – ஐக்கிய அரபு இராச்சியம் அணிகளும், இந்தியா – பாகிஸ்தான் அணிகளும்
பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இலங்கை மகளிர் அணி ஆரம்ப சுற்றுப் போட்டியில் பங்கேற்கும் முதலாவது போட்டி நாளை (20) பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது.