Home Blog Page 2

எங்களுக்கு தேவை மிடில் ஆர்டர்.. கேஎல் ராகுல் இடம்பெறாதது குறித்து அஜித் அகார்கர் கருத்து

இந்திய அணி தேர்வு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் ரோகித் சர்மா மற்றும் அஜித் அகார்கர் பங்கேற்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் கேஎல் ராகுல் இடம்பெறாறது குறித்து அஜித் அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார். டி20 உலகக் கோப்பை தொடரில் மிடில் ஆர்டரில் விளையாட எங்களுக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள்தான் தேவை.

அதனால் சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் ஆகியோரை தேர்வு செய்துள்ளோம். சாம்சன் அனைத்து ஆர்டர்களிலும் ஆடுவார். அதனால் இது யார் சிறந்தவர்கள் என்பது பற்றியதல்ல. எங்களுக்கு என்ன தேவை என்பதை பற்றியது.

 

மிக மோசமான சாதனையை பதிவு செய்த யுஸ்வேந்திர சாஹல்

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் – ராஜஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி முதலில் தடுமாறினாலும் பின்னர் அதிரடி காட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 ஓவர்கள் வீசி 62 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தனது மோசமான சாதனையை சாஹல் படைத்துள்ளார். இதற்கு முன்னர் கொல்கத்தா அணிக்கு எதிராக 1 விக்கெட் வீழ்த்தி 54 ரன்கள் விட்டுக் கொடுத்ததே மோசமான சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

கடைசி பந்தில் விக்கெட்டை இழந்த ராஜஸ்தான்- 1 ரன்னில் த்ரில் வெற்றி பெற்ற ஐதராபாத்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி முதலில் தடுமாறினாலும் கடைசியில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நிதிஷ் ரெட்டி 76 ரன்னிலும் கிளாசன் 42 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கமே சொதப்பாலாக அமைந்தது. ராஜஸ்தான் முதல் ஓவரில் 1 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பட்லர், சாம்சன் 0 ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

இதனையடுத்து ஜெய்ஸ்வால் – ரியான் பராக் ஜோடி பொறுப்புடன் விளையாடினர். இருவரும் அரை சதம் விளாசி அசத்தினர். ஜெய்ஸ்வால் 67 ரன்னிலும் பராக் 77 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து ஹெட்மயர் 13 ரன்னில் நட்ராஜன் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

இதனால் ராஜஸ்தான் வெற்றி பெற 2 ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை கம்மின்ஸ் வீசினார். முதல் பந்தில் ஜூரல் (1) விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த அஸ்வின் 1 ரன் எடுத்தார். அடுத்த 3 பந்துகளை ரோமன் பவல் டாட் பந்துகளாக மாற்றினார். கடைசி பந்தை பவல் சிக்சராக மாற்ற கடைசி ஓவரில் ராஜஸ்தானுக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். முதல் பந்தை அஸ்வின் 1 ரன் எடுத்தார். 2-வது பந்தை பவல் 2 ரன்கள் எடுத்தார். 3-வது பந்தை பவுண்டரி விரட்டினார் பவல். இதனால் கடைசி 3 பந்தில் ராஜஸ்தானுக்கு 6 ரன்கள் மட்டுமே தேவைபட்டது. அடுத்த பந்தில் பீல்டிங்கின் தவறால் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. பரபரப்பான கட்டத்தில் 5-வது பந்தும் 2 ரன்கள் எடுக்கப்பட்டது.

இதனால் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் சிறப்பாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதனால் ஐதராபாத் அணி 1 ரன்னில் வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டும் நடராஜன், பேட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

பிசிசிஐ புறக்கணித்த நிலையில் கேஎல் ராகுல் குறித்து எல்எஸ்ஜி டுவிட் பதிவு

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட இந்திய அணியிலும், காத்திருப்போர் பட்டியலிலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல். ராகுலுக்கு இடம் கிடைக்கவில்லை.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் களம் இறங்கிய ரிஷப் பண்ட், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கே.எல். ராகுல் புறக்கணிக்கப்பட்டதற்கு டுவிட்டர்வாசிகள் தங்களது விமர்சனங்களை பதவிட்டு வருகிறார்கள். ரிஷப் பண்ட்-ன் சாதனையை கே.எல். ராகுல் சாதனையுடன் ஒப்பிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் கே.எல். ராகுல் விளையாடி வரும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஒரு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு போஸ்ட் பதிவிட்டுள்ளது. அதில் “கே.எல். ராகுல் எப்போதும் எங்களுடைய நம்பர் ஒன்” எனக் குறிப்பிட்டுள்ளது.

 

 

ஸ்டாயினிஸ் அதிரடி- மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய லக்னோ

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க வீரரான ரோகித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா முறையே 10 மற்றும் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்த நிலையில், களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமல், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

இவரை தொடர்ந்து களமிறங்கிய நேஹல் வதீரா நிதானமாக ஆடி 46 ரன்களை சேர்த்தார். துவக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடி 32 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை குவித்தது.

எளிய இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு அர்ஷின் குல்கர்னி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கேப்டன் கே.எல். ராகுல் 22 பந்துகளில் 28 ரன்களை குவித்து ஆட்மிழந்தார். அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டாயினிஸ் அதிரடியாக ஆடி 44 பந்துகளில் 62 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

லக்னோ அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை குவித்து, நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் சார்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், துஷாரா, கோட்சி, முகமது நபி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

 

மீண்டும் வருகிறது Nokia 3210

கடந்த 1999 ம் ஆண்டு Nokia 3210 மொபைல் போன் வெளியானது. இது இந்திய சந்தையில் ரூ.2,999க்கு விற்பனையானது.

உலகம் முழுவதும் இந்த செல்போன் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. அதை தொடர்ந்து ஸ்மார்ட் போன்கள் வருகையால் இதன் தயாரிப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது.

தொழில் நுட்பம் தொடர்ந்து வளர்ச்சியடைந்தாலும் நம் நினைவுகளில் நோக்கியா 3210 ஆழமாக பதிந்துள்ளது. இதன் ஆயுள், எளிமை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் சின்னமாக, 3210 பலரின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்தது.

இப்போது, உலகெங்கிலும் உள்ள மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த நோக்கியா தயாராகி உள்ளது.

இந்நிலையில் Nokia 3210 மொபைல் போன் 25 ஆண்டுகளுக்கு பிறகு நவீன வசதிகளுடன் மீண்டும் தற்போது விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.இந்த நோக்கியா போன் – 2024 க்கான புதிய பட்ஜெட் போன் ஆகும் இதில் 4G, Bluetooth, Snake game 2 வசதிகள் உள்ளன.

 

விளையாட்டு வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு நல்லது – குரங்கு பெடல் டிரைலர்

சிவகார்த்திகேயன் தற்பொழுது அமரன் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். நடிப்பது மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் பல வெற்றி படங்களை தயாரித்தும் வருகிறார்.

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன. தற்போது சூரி நடிக்கும் கொட்டுக்காளி என்ற படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டை பெற்றுள்ளது. விரைவில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைதொடர்ந்து ‘குரங்கு பெடல்’ படத்தை அடுத்து எஸ் கே ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. கமலக்கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார் இதற்கு முன் இவர் ‘வட்டம்’ மற்றும் ‘மதுபான கடை’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

காளி வெங்கட் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ராசி அழகப்பன் எழுதிய சிறுக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் மே மாதம் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டிரெயிலர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

கோடை விடுமுறையில் நாம் சிறுவயதில் செய்த குறும்பையும் விளையாட்டையும் கண் முன் காட்சி படுத்தியுள்ளனர். 5 நண்பர்கள் அவர்களது கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக செலவிடும் காட்சிகளும் அதில் யார் முதலில் சைக்கிள் ஓட்ட கத்துக் கொள்கிறார்கள போன்ற காட்சிகள் டிரைலரில் இடம் பெற்றுள்ளது.

சைக்கிள் ஓட்டுவதற்காக் ஒரு சிறுவன் எவ்வளவு முயற்சிகளை செய்கிறான் அதற்கடுத்து என்ன நடந்தது என டிரைலர் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது.

 

‘சண்டையில் சாவுறதுதான் வீரம்ன்னு சொல்லி இருக்காங்க’ – அதிரடியான ‘ரசவாதி’ டிரைலர்

‘மெளனகுரு’, ‘மகாமுனி’ படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் கவனம் பெற்றவர் இயக்குனர் சாந்தகுமார். இவர் இயக்கியுள்ள மூன்றாவது படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் இணைந்து ‘போர்’ என்ற படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை ‘டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி’ தயாரிக்கிறது. இப்படத்திற்கு ‘ரசவாதி’ என்று தலைப்பிடப்பட்டது.

இதில், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜித் ஷங்கர், ஜிஎம் சுந்தர், எஸ்.ரம்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு சிவா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஜனவரி மாதம் இப்படத்தின் டீசர் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது. அதைத்தொடர்ந்து தற்பொழுது படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது . படத்தின் டிரெயிலரை திரைத்துறை பிரபலமான லோகேஷ் கனகராஜ், அனிருத், கார்த்தி, கார்த்திக் சுப்பராஜ், துல்கர் சல்மான், எஸ்.ஆர் பிரபு அவர்களின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டனர். படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அர்ஜூன் தாஸ் கதாப்பாத்திரத்தின் மூன்று காலக்கட்டத்துடைய வாழ்க்கை இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. ரசவாதி படத்தின் டிரெயிலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.மௌனகுரு மற்றும் மகாமுனி வெற்றியைத் தொடர்ந்து இப்படமும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 தொடர்: சாஹிப் அல் ஹசன், முஸ்தாபிஜூர் ரஹ்மானுக்கு இடமில்லை

ஜிம்பாப்வே அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக வங்காளதேசம் செல்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி மே 3-ந்தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில் முதல் மூன்று போட்டிக்கான வங்காளதேசம் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆல்-ரவுண்டர் சாஹிப் அல் ஹசன், வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரஹ்மான் ஆகியோர் சேர்க்கப்படவில்லை.

சாஹிப் அல் ஹன் கண் பிரச்சனை காரணமாக விளையாடாமல் இருக்கிறார். குணமடைய இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதால் அவர் இடம் பெறவில்லை. மேலும், சர்வதேச கிரிக்கெட்டிற்கு தயாராகும் வகையில் டாக்கா பிரீமியர் லீக்கில் விளையாட விரும்புகிறார். அவருக்குப் பதிலாக ஆஃபிஃப் ஹொசைன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முஸ்தாபிஜூர் ரஹ்மான் ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக விளையாடி வருகிறது. அவர் மே 1-ந்தேதி பஞ்சாப் அணிக்கெதிராக விளையாடிய பின், சொந்த நாடு திரும்புகிறார். இருந்த போதிலும் அணியில் சேர்க்கப்படவில்லை.

முஸ்தாபிஜூர் ரஹ்மான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருவதால், அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என வங்காளதேசம் தெரிவித்துள்ளது.

 

டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள கொல்கத்தா அணி இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது. டெல்லி அணி இதுவரை விளையாடிய பத்து போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வெற்றி, ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

டெல்லி அணி விளையாடிய கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.