Home Blog Page 304

4 கோடி ரூபா பணம் மோசடி !

#image_title

தனியார் நிறுவனமொன்றில் சுமார் 4 கோடி ரூபாவை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் கோட்டை பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சந்தேக நபர் குறித்த நிறுவனத்தின் ஊழியராக செயற்பட்டு உண்டியல்களை மாற்றி மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 34 வயதான மொரட்டுவ, மொல்பே பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவர் இன்று (09) மலையக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

மின்கட்டணத்தை குறைக்க தீர்மானம் !

#image_title

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரும் தேசிய பட்டியலிலிருந்து பாராளுமன்றத்திற்கு வர தயாராகி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான இரண்டு நாள் விவாதம் நாளையும் நாளை மறுதினமும் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

07 வகையான பொருட்களின் விலை குறைப்பு !

#image_title

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச 07 வகையான பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இதன்படி, காய்ந்த மிளகாய், சிவப்பு பருப்பு, கோதுமை மா, வெள்ளை சீனி, சிவப்பு பச்சரிசி (உள்ளூர்), வெள்ளை நாடு (உள்ளூர்) மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

#image_title

சுங்கத்துறை அதிரடிவலைவீச்சி ! சிக்கிய சட்டவிரோத பொருட்கள்

#image_title

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட தொலைக்காட்சிகள் மற்றும் குளிரூட்டிகளின் ஒரு தொகுதியை சுங்கத்துறை கையகப்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் எனக் கூறி இந்த பொருட்கள் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் 68 தொலைக்காட்சிப் பெட்டிகள், 77 குளிரூட்டிகள், பயன்படுத்தப்பட்ட டயர்கள் உள்ளிட்ட உபகரணங்கள் இருந்ததாக சுங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை சுங்க மத்திய சரக்கு ஆய்வுப் பிரிவின் அதிகாரிகள் குறித்த பொருட்களைக் கைப்பற்றியதாக பிரதி சுங்கப் பணிப்பாளர் ஆர்.எஸ்.வீரசிறி குறிப்பிட்டார்.

7000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்த மெத்தியூஸ்

7000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்த மெத்தியூஸ்
7000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்த மெத்தியூஸ்

நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று ஆரம்பாகிய முதலாவது டெஸ்ட் போட்டியில் மெத்தியூஸ் குறித்த சாதனையினை படைத்தார்.

இலங்கைக்கு அணி சார்பாக 7000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்த மூன்றாவது வீரராக மெத்தியூஸ் இணைந்துள்ளார். இதற்கு முன்னராக மஹேல ஜயவர்த்தன மற்றும் குமார் சங்ககார குறித்த சாதனை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தனது 101 ஆவது டெஸ்ட் போட்டியில் 7000 ஓட்டங்களை மெத்தியூஸ் கடந்துள்ளார்.

வாகனங்கள் குறித்து முக்கிய அறிவிப்பு!

#image_title

அதிக புகையை வெளியேற்றும் வாகனங்கள் குறித்து தகவல் அளிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் காற்று மாசு பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

070 350 0525 என்ற வட்ஸ்எப் எண் இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக தனியார் பஸ்கள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள், அரச வாகனங்கள் மற்றும் பொலிஸ் வாகனங்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் கொழும்பு பஸ்டியன் மாவத்தையில் தனியார் பஸ்களில் புகை பரிசோதனை செய்யப்படுவதாகவும், கடந்த மாத சோதனையில் 40 சதவீதத்துக்கும் அதிகமான பஸ்கள் புகை பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

இங்கு தோல்வியடையும் வாகனங்கள் 14 நாட்களுக்குள் வேரஹெர தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படாவிட்டால், வருமான அனுமதி பத்திரம் கருப்புப் பட்டியலில் இணைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் காற்று மாசுத் பிரிவின் திட்ட இயக்குநர் ஐ.ஜி. தசுன் ஜனக அவர்களும் கலந்து கொண்டார்.

கடந்த சில வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் புகையை வெளியிடும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புகைப் பரிசோதனையில் தோல்வியடையும் வாகனங்களுக்கு முதல் உத்தரவின்படி, வேரஹெர தலைமை அலுவலகத்திற்கு வராவிட்டால் நினைவூட்டல் வழங்கப்படும் என்றும், அதை கடைபிடிக்காவிட்டால், அவர்கள் சாதாரண முறையில் வருமான அனுமதிப் பத்திரம் பெற முடியாத வகையில் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

வேளாங்கண்ணியில் இருந்து திருட்டுத்தனமாக நியூசிலாந்து செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 9 பேர் கைது

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து படகு மூலம் வெளிநாட்டுக்கு இலங்கை அகதிகள் திருட்டுத்தனமாக செல்ல இருப்பதாக நாகை மாவட்ட ‘கியூ’ பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பொலிஸார் நேற்று முன்தினம் வேளாங்கண்ணியில் உள்ள விடுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள விடுதியில் தங்கியிருந்த தூத்துக்குடி மாவட்டம் குளத்துவாய்ப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கேனுஜன்(வயது 34), கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி முகாமை சேர்ந்த ஜெனிபர்ராஜ்(23), தினேஷ்(18), புவனேஸ்வரி(40), செய்யாறு கீழ்புதுப்பாக்கம் முகாமை சேர்ந்த துஷ்யந்தன்(36), வேலூர் வாலாஜாப்பேட்டை குடிமல்லூர் அகதிகள் முகாமை சேர்ந்த சதீஸ்வரன்(32) ஆகிய 6 பேரை பிடித்து வேளாங்கண்ணி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் 6 பேரும் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பதிவு செய்யப்படாத விசைப்படகில் திருட்டுத்தனமாக வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல திட்டமிட்டதும், இதற்காக தங்களது முகாம்களில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு வந்து விடுதியில் தங்கி இருந்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து இவர்கள் 6 பேரையும் பொலிஸார் கைது செய்தனர். மேலும் இவர்கள் 6 பேரிடம் இருந்து ரூ.17 லட்சத்தை ‘கியூ’ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் இவர்கள் 6 பேரும் நியூசிலாந்து நாட்டிற்கு திருட்டுத்தனமாக படகில் செல்ல முயன்றது தெரிய வந்தது. இவர்கள் நியூசிலாந்து செல்வதற்கு சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அகதிகள் முகாமை சேர்ந்த வரதராஜன்(38), விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு முகாமை சேர்ந்த ரவிச்சந்திரன்(41), திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு முகாமை சேர்ந்த அன்பரசன்(29) ஆகிய 3 பேரும் சேர்ந்து உதவியதும், அவர்கள் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து ‘கியூ’ பிரிவு பொலிஸார் வேளாங்கண்ணியில் இருந்த வரதராஜன், ரவிச்சந்திரன், அன்பரசன் ஆகியோரை கைது செய்தனர். இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 9 பேரிடமும் ‘கியூ’ பிரிவு பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் -ஆளுநருக்கு அன்புமணி கண்டனம்..!

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் -ஆளுநருக்கு அன்புமணி கண்டனம்..!
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் -ஆளுநருக்கு அன்புமணி கண்டனம்..!

தமிழக ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியதை விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆன்லைன் ரம்மியால் இதுவரை 18 நபர்கள் உயிரிழந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

திருத்தணியில் நடைபெற்ற பாமகவின் 2.0 பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், சென்னையில் ஆயிரம் பேருந்துகளை தனியார் மையம் ஆக்குவதை விட 3500 பேருந்துகளை வாங்கி இலவசமாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

தாய்வான் நாட்டை இணைக்க சீனா அழுத்தம் தரும் – அமெரிக்கா உளவுத்துறை அறிக்கை..!

தாய்வானை இணைக்க சீனா அழுத்தம் தரும் - அமெரிக்கா உளவுத்துறை அறிக்கை..!
தாய்வானை இணைக்க சீனா அழுத்தம் தரும் - அமெரிக்கா உளவுத்துறை அறிக்கை..!

தாய்வான் நாட்டை தன்னுடன் இணைக்க சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று அமெரிக்காவின் புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் இடைவெளியை அதிகரிக்கும் என்றும் அமெரிக்காவின் ஆதிக்கத்தைக் குறைக்கும் என்றும் அமெரிக்க உளவுத் துறையின் வருடாந்திர அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளின் கடல் மற்றும் நிலப்பகுதிகளுக்கு சீனா உரிமை கோரி அரசு இயந்திரத்தையும் அதிகாரத்தையும் முழுவதுமாகப் பயன்படுத்தி வருகிறது என்றும் தாய்வானின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா? ; உலக டெஸ்ட் சாம்பியன் இறுதி போட்டிக்கு இந்தியா நுழையுமா..?

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

இந்தூரில் நடந்த மூன்றாவது டெஸ்டில் அவுஸ்ரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

இந்தியா-அவுஸ்ரேலியா அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் போட்டியை `சமநிலை’ செய்தாலே இந்தியா தொடரை வென்றுவிடும். ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நுழைவதற்கு இந்த டெஸ்டை வெல்வது கட்டாயமாகும்.

தோற்றாலோ அல்லது டிரா செய்தாலோ இலங்கை-நியூசிலாந்து தொடரை பொறுத்து வாய்ப்பு அமையும். அதற்கு இடமளிக்காத வகையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெறுவது அவசியமாகும்.

இந்தூர் டெஸ்டில் இந்திய வீரர்களின் துடுப்பாட்டம் மிகவும் மோசமாக இருந்தது. அவுஸ்ரேலிய அணி 2 நாள் மற்றும் ஒரு செசனில் இந்தியாவை எளிதில் வீழ்த்தி இருந்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளையாட வேண்டிய நெருக்கடியில் இந்திய வீரர்கள் உள்ளனர். நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

விக்கெட் காப்பாளர் ஸ்ரீதர் பரத்துக்கு பதிலாக இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 24 வயதான அவர் டெஸ்டில் அறிமுகமாகுகிறார். பரத் கடந்த 3 டெஸ்டிலும் எதிர்பார்த்த அளவுக்கு திறமையை வெளிப்படுத்தவில்லை.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி இந்த தொடரில் அரைசதம் கூட அடிக்கவில்லை.

இதனால் அவர் திறமையை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளார். ரோகித் சர்மா, அக்ஷர் படேல் மட்டுமே நிலையாக ஆடி வருகிறார்கள். பந்துவீச்சில் ஜடேஜா (21 விக்கெட்), அஸ்வின் (18 விக்கெட்) நல்ல நிலையில் உள்ளனர். கடந்த டெஸ்டில் ஆடாத முகமது ஷமி இடம் பெறுவார். உமேஷ் யாதவ் நீக்கப்படும் வாய்ப்புள்ளது.

அவுஸ்ரேலியா கடந்த போட்டியை போலவே இந்த டெஸ்டில் வென்று தொடரை சமன் செய்ய கடுமையாக போராடும். அணித்தலைவர் கம்மின்ஸ் நான்காவது டெஸ்டிலும் ஆடமாட்டார்.சொந்த பணி காரணமாக அவர் நாடு திரும்பியுள்ளார். இதனால் ஸ்டீவ் ஸ்மித் இந்தப் போட்டியிலும் அணித்தலைவராக பணியாற்றுவார்.

அவுஸ்ரேலிய அணியின் துடுப்பாட்டத்தில் லபுஷேன் (178 ரன்), உஸ்மான் கவாஜா (153), ஹேண்ட்ஸ் ஹோம் ஆகியோரும், பந்து வீச்சில் நாதன் லயன் (19 விக்கெட்), மர்பி (11), மேத்யூ குன்மேன் (8) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

இரு அணிகளும் நாளை மோதுவது 106-வது டெஸ்டாகும். இதுவரை நடந்த 105 போட்டியில் இந்தியா 32 டெஸ்டிலும், ஆஸ்திரேலியா 44 டெஸ்டிலும் வெற்றி பெற்றுள்ளன. 28 போட்டி `டிரா’ ஆனது. ஒரு டெஸ்ட் `டை’ ஆனது. நாளைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.