Home Blog Page 305

உருளைக்கிழங்கு மீதான வரி அதிகரிப்பு

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு  மீதான விசேட வர்த்தக வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கான விசேட வர்த்தக வரி 20 ரூபாவில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வரி திருத்தம் தொடர்பான வர்த்தமானியை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட புழக்கத்தில் இல்லாத நினைவு நாணயத்தை விற்பனை செய்ய மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

11 ஓட்டங்களில் வெற்றியை பறித்த குஜராத் ஜெயண்டஸ் அணி

ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் ஜெயண்டஸ் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

அதிரடி காட்டிய குஜராத் ஜெயன்ட்ஸ்

மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயண்டஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

நாணயசுழற்சியில் வென்ற குஜராத் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து ஆட்டத்தில் களமிறங்கியது, இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்கள் குவித்து அசத்தியது.

அணியில் அதிகபட்சமாக டங்கிலி 65 ஓட்டங்களையும் ஹர்லீன் தியோல் 67 ஓட்டங்களையும் குவித்து குஜராத் அணிக்கு பலம் சேர்த்தனர்.

விடாமல் துரத்திய பெங்களூரு

201 ஓட்டங்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு இறுதி வரை இலக்கை அடைய போராடினர்.

சோஃபி டெவின் 66 ஓட்டங்களையும், ஹீதர் நைட் 30 ஓட்டங்களையும் குவித்து இருந்தும் பெங்களூரு அணியால் வெற்றி இலக்கான 202 ஒட்டங்களை அடைய முடியவில்லை.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து வெறும் 190 ஓட்டங்கள் மட்டுமே குவித்து இருந்தது.

இதனால் ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு அணியை 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் ஜெயண்டஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய ராசிபலன் 09.03.2023

மேஷம்

வழக்கு சாதகமாக தீர்ப்பு வரும். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தொட்டது துலங்கும் நாள்.

ரிஷபம்

பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.

மிதுனம்

பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வெளியூரிலிருந்து வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னைகள் தீரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தடைகளை தாண்டி வெல்லும் நாள்.

கடகம்

உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். துணிச்சலுடன் செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்

கணவன் – மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். அழகும் இளமையும் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கன்னி

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வரும். உங்களைப் பற்றி சிலர் தவறாக பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

துலாம்

விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப்போங்கள். உத்தியோகத்தில் மறைமுக பிரச்னைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

விருச்சிகம்

ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். நலம் தரும் சிறப்பான நாள்.

தனுசு

மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

மகரம்

கணவன்-மனைவிக்குள் இருந்த மனகசப்புகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாகும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.

கும்பம்

சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு நல்லது சொல்லப்போய் பொல்லாப்பாக போய் முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள்யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். பொறுமை அதிகம் தேவைப்படும் நாள்.

மீனம்

விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு உதவுவீர்கள். நன்மை பல நடக்கும் நாள்.

 

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் பொலிஸாரால் முறியடிப்பு !

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்த பேரணியை கலைப்பதற்கு பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதல் வெற்றியை பதிவு செய்யுமா பெங்களூர் அணி? குஜராத் அணியுடன் இன்று மோதல் !

இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) சார்பில் முதலாவது மகளிர் பிரீமியர் ஹலீக்’ 20 ஓவர் போட்டி மும்பையில் நடைபெற்று வருகின்றது.

இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெய்ன்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். ஹலீக்’ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ஹபிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். 6-வது ஹலீக்’ ஆட்டம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கின்றது.

இதில் பெத்முனி தலைமையிலான குஜராத்-ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தாங்கள் விளையாடிய 2 ஆட்டங்களிலும் தோற்று இருந்தது.

இதனால் ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து முதல் வெற்றியை பெறுவது எந்த அணி என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் அணி மும்பையிடம் 143 ரன் வித்தியாசத்திலும், உ.பி.வாரியர்சிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது.

பெங்களூர் அணி 60 ரன் வித்தியாசத்தில் டெல்லியிடமும், 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடமும் தோற்றது.

5 போட்டிகள் முடிவில் மும்பை, டெல்லி தலா 4 புள்ளியுடனும், உ.பி.வாரியர்ஸ் 2 புள்ளியுடனும் உள்ளன. பெங்களூர், குஜராத் புள்ளி எதுவும் பெறவில்லை.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெண்கள் செய்த காரியம் !

பெண் விமானிகள் மற்றும் பெண்களை மாத்திரம் கொண்ட விமானக் குழு உறுப்பினர்களுடன் இந்தியாவின் திருச்சிக்கு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விமானமொன்றை அனுப்பியது

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இன்று (08) காலை இவ்வாறு விமானமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

ஏ-320 எயார்பஸ் ரக விமானம் அனுப்பப்பட்டதுடன், கெப்டன் சாமிக்க ரூபசிங்க பிரதான விமானியாகவும், பிமாலி ஜீவந்தர துணை விமானியாக இருந்தனர்.

இது தவிர, விமான பணியாளர்கள் என 05 பெண் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அவர்களில் விமான நடவடிக்கைகளின் பிரதானி ரோஷனி திஸாநாயக்க, கெபின் மேற்பார்வையாளர் உபுலி வர்ணகுல, விமானப் பணிப்பெண் லக்மினி திஸாநாயக்க, ஜெயகலனி கின்சன் மற்றும் ஹர்ஷி வல்பொல ஆகியோர் அடங்குவர்.

இன்று காலை 08.10 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-131 இல் இந்தியாவின் திருச்சிக்கு 67 பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது.

இந்த பெண் விமானிகள் மற்றும் பெண் ஊழியர்கள் இன்றிரவு 11.10 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-132 இல் 61 பயணிகளை ஏற்றிக்கொண்டு இந்தியாவின் திருச்சியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர்.

 

கோதுமை மாவின் விலை குறைப்பு !

பிரிமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலை, கிலோ ஒன்றுக்கு 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதென செரண்டிப் மற்றும் பிரிமா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

 

குறித்த விலைக்குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வருமென அந்த நிறுவனங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

பேரீச்சம்பழ விசேட வர்த்தக வரி குறைப்பு !

ஒரு கிலோகிராம் பேரீச்சம்பழத்திற்கான 200 ரூபா விசேட வர்த்தக வரி, ஒரு ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாண் விலை குறைப்பு !

450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரக் கட்டா உட்பட 8 பேர் மடகஸ்கரில் கைது !

போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் நந்துன் சிந்தக (ஹரக் கட்டா) உட்பட 08 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக மடகஸ்கர் பாதுகாப்பு படையினர் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஹரக் கட்டாவின் மனைவி மற்றும் மனைவியின் தந்தையும் அடங்குவதாக கூறப்படுகிறது.

சர்வதேச பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு பிடியாணைக்கு அமைய ஹரக் கட்டா கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.