Home Blog Page 306

கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல்

தும்முல்ல சந்தியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி காரணமாக இவ்வாறு போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுபெற்றது!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது.

அதன்படி, இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 313.77 ரூபாவாகவும் விற்பனை விலை 331.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மஹிந்தவிற்கு எதிரான வௌிநாட்டு பயணத்தடை நீக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான வௌிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையில் இவ்வாறு வௌிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி 2,217 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஜனவரி மாத இறுதியில் 2,121 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கையிருப்பு சொத்துகளுடன் ஒப்பிடுகையில் இது 4.5% அதிகரிப்பாகும்.

ஆறிப்போன டீயை கொடுத்ததால் திட்டிய மாமியாரை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மருமகள்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு என்பவரது மனைவி பழனியம்மாள் (வயது 75). இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகன் சுப்பிரமணிக்கு திருமணமாகி மனைவி கனகு (42) மற்றும் ஒரு மகனுடன் அதே ஊரில் வசித்து வருகிறார்.

கணவர் இறந்து விட்டதால், பழனியம்மாள் தனது மகனுடன் தங்கியுள்ளார். விவசாய கூலி வேலைக்கு செல்லும் சுப்பிரமணி நேற்று இரவு வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் மனைவி, மகன், தாயுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட பின்னர் அனைவரும் தூங்க சென்றனர்.

இந்த நிலையில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தலைவலியால் அவதிப்பட்ட பழனியம்மாள் தனது மருமகள் கனகுவிடம் சூடாக ஒரு டீ போட்டு தருமாறு கேட்டுள்ளார். தூக்கத்தில் இருந்த கனகுவும் எழுந்து மாமியாருக்கு டீ போட்டு கொண்டு வந்து கொடுத்தார்.

அப்போது டீ மிகவும் ஆறிப்போய் இருந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பழனியம்மாள் மருமகளை திட்டியுள்ளார். நள்ளிரவில் டீ போட்டு கொடுத்ததற்கு நன்றி கூறாமல் இப்படி திட்டுகிறீர்களே என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த கனகு அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து மாமியார் என்றும் பாராமல் சரமரியாக தாக்கினார். இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் அடைந்த பழனியம்மாள் வலியால் கூச்சல் போட்டார்.

இதைக்கேட்டு தூங்கி எழுந்த பழனியம்மாளின் மகன் சுப்பிரமணி மற்றும் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பழனியம்மாளை மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த இலுப்பூர் பொலிஸார் பழனியம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கனகுவை கைது செய்தனர்.

சர்வதேச மகளிர் தினமான இன்று மாமியாரை மருமகள் அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்…

அனுராதபுரம் – பிரதானமாக சீரான வானிலை

மட்டக்களப்பு – அடிக்கடி மழை பெய்யும்

கொழும்பு – பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

காலி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

யாழ்ப்பாணம் – சிறிதளவில் மழை பெய்யும்

கண்டி – பிரதானமாக சீரான வானிலை

நுவரெலியா – பிரதானமாக சீரான வானிலை

இரத்தினபுரி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

திருகோணமலை – அடிக்கடி மழை பெய்யும்

மன்னார் – பிரதானமாக சீரான வானிலை

(வளிமண்டலவியல் திணைக்களம்)

இந்திய கடன் குறித்து புதிய தீர்மானம்

பல மாத காலத்திற்கு வழங்கப்பட்ட 01 பில்லியன் டொலர் இந்திய கடன் வசதியை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளதோடு, இது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கடன் வசதி இந்த ஆண்டு மார்ச் 17 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

அதனுடன் தொடர்புடைய கடன் வசதியின் கீழ் மூன்றில் இரண்டு பங்கு மருந்து மற்றும் உணவுக்காக இலங்கை பயன்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

 

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 3,269 நிலையங்களில் அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் மதியம் 12.10 மணி வரை பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளையும் தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்ய முடியாது எனவும், அதற்கான பணிகளை பாடசாலைகளே மேற்கொள்ள வேண்டும் எனவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பதாரர்களின் பெயர், ஊடகம், தேசிய அடையாள அட்டை எண் பெண்/ஆண் ஆகிய திருத்தங்களை அதிபர்களின் ஆதரவுடன் குறித்த இணையதளம் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், உரிய திருத்தங்கள் எதிர்வரும் 12ஆம் திகதி நள்ளிரவு நிறைவடையும் எனவும், மீளாய்வு திகதிகள் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது எனவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இன்றைய ராசிபலன் 08.03.2023

இன்றைய ராசிபலன் 08.03.2023

மேஷம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை ஆலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அமோகமான நாள்.

ரிஷபம்

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் – பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

மிதுனம்

எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். புதிய வேலை கிடைக்கும். பழையகடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களால் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

கடகம்

குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நன்மை நடக்கும் நாள்.

சிம்மம்

கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அரை குறையாக நின்ற வேலைகள் முடியும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

கன்னி

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்சனை வந்து நீங்கும். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

துலாம்

கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப்போவது ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் குறையும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். எளிய உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலை யாட்களால் பிரச்னை வரக்கூடும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளைதாண்டி முன்னேறும் நாள்.

விருச்சிகம்

உங்கள் இலக்குகளை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

தனுசு

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பொறுப்பாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றைவிட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மகரம்

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைகற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைகூடும். புதியபாதை தெரியும் நாள்.

கும்பம்

சந்திராஷ்டமம் இருப்பதால் இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். உறவினர் நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர் களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.

மீனம்

தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரர்கள் வகையில் ஒற்றுமை பிறக்கும். நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

 

இந்த வாரத்தில் வெளிவர இருக்கும் சிம்புவின் அடுத்த பட அறிவிப்பு

நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்த வெந்து தணிந்த காடு நல்ல விமர்சனங்கள் பெற்றாலும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. தற்போது சிம்புவின் நடிப்பில் உருவாகி ரிலீஸ்க்கு தயாராக உள்ள திரைப்படம் பத்து தல.

இப்படம் வரும் மார்ச் 30 அன்று வெளியாகிறது. நடிகர் சிம்பு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என செய்திகள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் நடிகர்கள், நடிகைகள், டெக்னீசியன்கள் குறித்த அறிவிப்பு இந்த வாரம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் எனவும் கூறப்படுகிறது.