Home Blog Page 310

இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்து விபத்து : 9 பேர் மாயம் -ஒருவர் பலி

இந்தோனேஷியாவில் கடலில் படகு கவிழ்ந்து ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மீன் பிடிக்க சென்றிருந்த மேலும் 9 பேர் காணாமல் போயுள்ளனர். தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா நில நடுக்கம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் பகுதி ஆகும்.

இங்குள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று மீன் பிடிக்க மீனவர்கள் பலர் தங்களது படகுகளில் சென்றனர். அப்போது பலத்த காற்று வீசியதால் அலையின் வேகம் அதிகரித்தது.

இதனால் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்தவர்கள் உடனே கரை திரும்புமாறு அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விட்டிருந்தது.

இருப்பினும் இந்த அதிக அலை காரணமாக மீன் பிடிக்க சென்றிருந்த ஒரு படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் படகில் இருந்த ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். மீன் பிடிக்க சென்றிருந்த மேலும் 9 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதனால் பலியானோர் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

தனியார் பஸ் அட்டகாசம்: கிளிநொச்சி டிப்போ இ.போ.ச ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு!

 

கிளிநொச்சி இ.போ.சபை பணியாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால், பஸ்கள் இன்று காலையில் சேவையில் ஈடுபடவில்லை.

அலுவலகப் பணியாளர்களிற்கான பஸ் சேவையை இ.போ.சபையினர் ஆரம்பித்த பின்னர், தனியார்துறையினர் அதில் குறுக்கீடு செய்ய ஆரம்பித்ததை தொடர்ந்து, தற்போது தனியார் துறையினரே அந்த சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், அதன் தொடர்ச்சியாக இ.போ.ச பேருந்துகளின் சுமுகமான சேவைக்கு தனியார் துறையினர் தொடர்ந்து அச்சுறுத்தலாக செயற்பட்டு வருகின்றனர். நேற்றும் தனியார்துறை பஸ் ஒன்று, இ.போ.ச பஸ்ஸினை நடுவீதியில் வழிமறித்து மிரட்டல் விடுத்திருந்தது.

பணிப்புறக்கணிப்பிற்கான காரணத்தை இ.போ.ச கிளிநொச்சி டிப்போ ஊழியர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிற்கு அறிவித்திருந்தனர்.

கச்சதீவு திருவிழா இன்று ஆரம்பம்

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (03) ஆரம்பமாகவுள்ளது.

திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

கச்சதீவு திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான உணவுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்

கல்வியிலிருந்து இடைவிலகும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி

பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகவியலார்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார்.

கொழும்பின் சில பகுதிகளில் மார்ச் 04 ஆம் திகதி 24 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம் (04) மாலை 02 மணி முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு 01 முதல் 04 வரையும், கொழும்பு 07 முதல் 11 வரையுமான பகுதிகளில் கடுவலை, கொலன்னாவை நகரசபைக்குட்பட்ட பகுதிகளிலும் வெல்லம்பிட்டிய மற்றும் கொட்டிகாவத்தையிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மாளிகாகந்த நீர்த்தாங்கிக்கான நீர் விநியோகக் கட்டமைப்பு புனரமைக்கப்படவுள்ளதால், நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளில் 20 பேர் தாயகம் திரும்ப விருப்பம்

 சட்டவிரோதமாக கடல் வழியாக பயணித்த போது, படகு பழுதடைந்ததில் நிர்க்கதியாகி வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளில் 20 பேர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இவர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கு தேவையான நிதி வசதிகளை அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு முன்னெடுத்து வருவதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வியட்நாமில் தற்போது 152 இலங்கை அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான அன்றாட தேவைகளை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான  உயர்ஸ்தானிகராலயம் முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில், இலங்கைக்கு திரும்பி வர இணக்கம் தெரிவிக்காத 130 பேரும் , அகதிகளுக்கான சர்வதேச அமைப்பினூடாக மூன்றாம் தரப்பு நாடுகளிடம் தீர்வை கோரியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வியட்நாமின் ஹனோயில் உள்ள இலங்கை தூதரகம், இந்த விடயம் குறித்து UNHCR மற்றும் IOM ஆகிய இரண்டு அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது.

Twitter செயலிக்கு மாற்றாக Bluesky அறிமுகம்

Twitter செயலிக்கு மாற்றாக அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி Jack Dorsey புதிய சமூக வலைத்தள செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

Twitter நிறுவனத்தை உலகின் முன்னணி பெரும் பணக்காரரான Elon Musk கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் அதிகாரிகள், பணியாளர்கள் பலர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இதன்போது, Twitter நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த Jack Dorsey அந்நிறுவனத்திலிருந்து வெளியேறினார். எனினும், அவர் விரைவில் Twitter நிறுவனத்தில் மீண்டும் இணைவார் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக Twitter போன்ற புதிய சமூக வலைதளத்தை Jack Dorsey அறிமுகப்படுத்தியுள்ளார்.

Twitter-ஐ ஒத்த வகையில் பயன்படுத்தப்படும் இந்த சமூக வலைத்தளத்திற்கு Bluesky என பெயரிடப்பட்டுள்ளது.

Apple இயங்குதளத்தில் சோதனை முயற்சியாக வெளியிடப்பட்டுள்ள இந்த செயலியானது விரைவில் Android இயங்குதளத்திலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பாண்டு மே மாதத்திற்கு இதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு தயாராகிவிடும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள Jack Dorsey, பயனர்களின் வசதிக்கேற்ப இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்த நபர் கைது

கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய நபர் ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அந்த நபர் வேலை வாங்கி தருவதாக கூறி 75 பேரிடம் மோசடி செய்துள்ளார்.

இவரால் பிடிபட்டவர்கள் 5 இலட்சம் ரூபா தொடக்கம் 22 இலட்சம் ரூபா வரையில் பணம் கொடுத்துள்ளதாகவும், சந்தேக நபர் கனடாவில் வேலை பெற்றுத் தருமாறு ஒருவரிடம் 33 இலட்சம் ரூபா பணத்தை கேட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபருடன் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அரசியல் சக்திகளின் தலையீட்டினால் இது நடந்ததாகவும் பண மோசடியில் சிக்கிய இளைஞன் ஒருவர் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் இந்த பண மோசடியில் சிக்கியவர்கள் பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று முறைப்பாடு செய்த போதும் பொலிஸார் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வறண்டு போன வெனிஸ் நகர கால்வாய்கள்; சேற்றில் கிடக்கும் படகுகள்*-*

 இத்தாலியின் வெனிஸ் நகரம் கால்வாய்களுக்கும் படகு சவாரிகளுக்கும் பெயர்பெற்றது.

ஆனால், தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், வெனிஸ் நகரின் கால்வாய்கள் தண்ணீர் இன்றி வறண்டு, படகுகள் அனைத்தும் சேற்றுக்குள் மூழ்கிக் கிடக்கின்றன.

வெனிஸ் நகர கால்வாய்களில் நுழைந்து செல்லும் படகுகள் ரசிக்கத்தக்கவை.

அந்நகரின் பெரும்பாலான போக்குவரத்து சேவை படகுகள் மூலமே இடம்பெற்ற நிலையில், தற்போது நகர மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெனிஸ் நகரை சுற்றியிருந்த 150 கால்வாய்கள் தண்ணீர் இன்றி வறண்டுபோனதால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பணியிடங்களுக்கும் கல்வி நிலையங்களுக்கும் செல்ல மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

பலரும் தங்கள் இருப்பிடங்களுக்கு நடந்தே செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சிலர் சேற்றில் இறங்கி, குறைந்த தொலைவுக்கு இயக்கப்படும் படகுகளில் சென்று மீண்டும் சேற்றில் இறங்கிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த வறட்சிக்கு மழையின்மை, வெப்பநிலை அதிகரிப்பு, கடல் மட்டம் தாழ்ந்தமை, ஆல்ப்ஸ் மலைத் தொடரில் பெய்த பனிப்பொழிவின் அளவு குறைந்தமை என பல காரணங்கள் கூறப்படுகின்றன.

வழமையாக அதிக வௌ்ளப்பெருக்கால் பாதிக்கப்படும் வெனிஸ் நகரம் தற்போது வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்குட்பட்டவர்கள் குறித்து TikTok எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

18 வயதுக்குட்பட்ட TikTok உறுப்பினர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 18 வயதுக்குட்பட்ட உறுப்பினர்கள் ஒரு நாளைக்கு 60 நிமிடங்கள் மட்டுமே TikTok கை பயன்படுத்த முடியும்

அடுத்த சில வாரங்களில் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்று TikTok தெரிவித்துள்ளது.