Home Blog Page 312

யாசகரிடமிருந்து கைக்குழந்தைiய அபகரித்துச் சென்ற மர்ம கும்பல்

பெண் யாசகரிடமிருந்து ஒன்றரை வயது கைக்குழந்தை ஒன்றை மூவரடங்கிய குழுவொன்று அபகரித்துச் சென்றுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பெண்ணொருவரும் ஆண்கள் இருவருமே குறித்த யாசகரிடமிருந்து கைக்குழந்தையை பலவந்தமாக பிடுங்கி, முச்சக்கரவண்டியொன்றில் ஏறிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் அந்த பெண் யாசகர் பம்பலப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பம்பலப்பிட்டியவில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு முன்பாக யாசகம் கேட்டுவந்த பெண்ணிடம் இருந்த கைக்குழந்தையே இவ்வாறு அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டியில் வந்திறங்கிய மூவரடங்கிய குழு, அந்தக் குழந்தைக்கு ஆடைகளை வாங்கி தருவதாகக் கூறி, அப்பெண்ணையும் முச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு தெமட்டகொடை பிரதேசத்துள்ள ஆடை விற்பனை நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.

அங்கு முச்சக்கரவண்டிக்கான வாடகை கட்டணத்தை செலுத்தி முச்சக்கரவண்டியை அனுப்பி வைத்துள்ளனர்.

பு​டவை கடைக்குச் சென்றவர்கள் சுமார் 1,900 ரூபாய்க்கு ஆடைகளை குழந்தைக்காக கொள்வனவு செய்துள்ளனர். அதனை குழந்தைக்கு உடுத்திவிட்டதன் பின்னர். அங்கிருந்து மற்றுமொரு முச்சக்கரவண்டியில் ஏறி, கொம்பனி வீதிக்கு வந்துள்ளனர்.

அங்குள்ள ஹோட்டல் ஒன்றுக்கு முன்பாகவிருக்கும் வாகன தரிப்பிடத்துக்கு முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்று முச்சக்கரவண்டியில் இருந்த பெண், கைக்குழந்தை தன்னிடம் தாருமாறும் தான் தூக்கிக்கொண்டு வருவமாகவும் யாசகரிடம் (பெண்) கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும், அதற்கு அந்த பெண் யாசகர் ஒப்புக்கொள்ளவில்லை. அப்போது அப்பெண்ணுடன் வந்திருந்த ஆண், யாசகரை தாக்கி முச்சக்கரவண்டியில் இருந்து கீழே தள்ளிவிட்டு, கைக்குழந்தையுடன் தப்பிச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பில் பெண் யாசகரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தார்.

தன்னுடைய குழந்தை இல்லாது அந்த பெண் யாசகர் கதறி அழுதுகொண்டிருக்கின்றார் என்றும்​ தெரிவித்த பொலிஸார், குழந்தையை கடத்தியவர்கள் தொடர்பில் எவ்விதமான தகவல்களும் கிடைக்கவில்லை. எனினும், குழந்தை பாக்கியம் இல்லாத ஜோடியே இந்தக் குழந்தையை கடத்தியிருக்கவேண்டும் என்றும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

COVID-19 தொற்றின் பின்னர் நாட்டை வந்தடைந்த முதலாவது சீன சுற்றுலா பயணிகள் குழு

COVID-19 வைரஸ் தொற்றுக்கு பின்னர் முதல்தடவையாக சீனச் சுற்றுலாப் பயணிகள் சிலரை ஏற்றிய ஶ்ரீ லங்கன் விமான சேவையின் விமானமொன்று நேற்றிரவு(01) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த சுற்றுலாப் பயணிகள் சீனாவின் Quanzhou நகரிலிருந்து நாட்டை வந்தடைந்துள்ளனர்.

குறித்த சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் உள்ளிட்ட தரப்பினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா நாளை(03) ஆரம்பம்

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா நாளை(03) ஆரம்பமாகவுள்ளது.

திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான உணவுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் குறிப்பிட்டார்

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென்மேற்கு பசிபிக்கில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் உள்ள கிம்பே நகரில் இருந்து 108 கி.மீ. வடமேற்கில் பிஸ்மார்க் கடல் பகுதியில் சுமார் 582 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக தெரிவித்துள்ளது.

உள்நாட்டு நேரப்படி மாலை 3.36 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள தஜிகிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

தொடர்ச்சியாக ஏற்படும் நிலநடுக்கங்கள் அங்குள்ள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

எஹலியகொட பிரதேசத்தில் 10 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 46 வயதுடைய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எஹலியகொட பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ​எஹலியகொட பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே சந்தேகத்தின் பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாக கூறப்படும் அந்த சிறுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர், ​வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்

அமெரிக்க அரச துறை சாதனங்களில் TikTok செயலியை பயன்படுத்த தடை

அமெரிக்க அரச துறைகளுக்கு சொந்தமான சாதனங்களில் TikTok செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே தரவிறக்கம் செய்யப்பட்ட செயலியை நீக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அரச தகவல்களை பாதுகாக்கும் முயற்சியாக அரசின் அனைத்து துறைசார்ந்த சாதனங்களில் TikTok செயலியை தடை செய்யும் சட்ட வரைவு அமெரிக்க பாராளுமன்றத்தில் கடந்த டிசம்பா் மாதம் நிறைவேற்றப்பட்டது.

இதன் அடிப்படையில், மத்திய அரசு துறைகளின் சாதனங்களில் TikTok செயலிக்கு தடை விதித்து அமெரிக்க அரசு கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது. மேலும், TikTok தரவிறக்கப்பட்டுள்ள சாதனங்களில் அதனை நீக்குவதற்கு 30 நாட்கள் அவகாசம் அளித்து, வழிகாட்டுதல்களையும் வெளியிட்டது.

‘நாட்டின் எண்மக் கட்டமைப்பை வெளிநாட்டு அச்சுறுத்தல்களிடமிருந்து பாதுகாக்க தற்போதைய அரசு அதிகளவில் முதலீடு செய்துள்ளது. அமெரிக்க மக்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையைக் காக்க எண்மக் கட்டமைப்பை மேம்படுத்தும் அரசின் முயற்சியில் இந்த உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது,’ என அரசின் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி கிறிஸ் டீரூசா குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, TikTok உள்ளிட்ட பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான எந்தவொரு செயலியையும் நாடு முழுவதும் தடை செய்ய அதிபருக்கு அதிகாரம் வழங்கும் சட்ட வரைவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனா்.

இந்நிலையில், TikTok செயலிக்கு தடை விதிக்கும் அமெரிக்க அரசின் செயற்பாடு, அவர்களின் பாதுகாப்பின்மையைக் காட்டுவதாக சீனா தெரிவித்துள்ளது. உலகின் முன்னணி நாடு என அடையாளப்படுத்திக்கொள்ளும் அமெரிக்கா, ஒரு பொழுதுபோக்கு செயலியைத் தடை செய்யும் அளவிற்கு பயப்படுவது ஏன் என சீனா கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியாவில் TikTok செயலிக்கு எதிரான தடை உத்தரவு கடந்த 2 ஆண்டுகளாக அமுலில் உள்ளது.

அண்மையில் கனடாவும் அரச சாதனங்களில் TikTok செயலியை பயன்படுத்த தடை விதித்தது.

தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிராக பாராளுமன்றில் விவாதம்

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் எதிர்வரும் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இரண்டு நாள் விவாதம் நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (1) தீர்மானித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்ற விவகாரக் குழுவில் இரண்டு நாள் விவாதம் கோரினார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டமை தொடர்பில் நாட்டில் பலத்த எதிர்ப்பு நிலவி வருவதால், இது தொடர்பில் பரந்துபட்ட விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டவரின் 7 இலட்ச ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு!

கண்டியிலிருந்து பண்டாரவளை நோக்கிப் பயணித்த நோர்வே நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரின் ஏழு இலட்ச ரூபா பெறுமதியான உடைமைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விலை உயர்ந்த ‘ட்ரோன்’ கெமரா உட்பட பல பொருட்கள் கொண்ட பயணப் பொதியே இவ்வாறு இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் ரயில் தரித்து நின்ற போது குறித்த பொதி திருடப்பட்டிருக்கலாம் என சுற்றுலாப் பயணி சந்தேகம் தெரிவித்துள்ளார்.

மேற்படி பயணப் பொதியில் 25 000 ரூபா பணம், ட்ரோன் கெமரா, ஸமார்ட் தொலைபேசி உட்பட பல விலை உயர்ந்த பொருட்கள் அந்த பொதிக்குள் இருந்ததாக அவர் தனது பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சுற்றுலா பொலிஸார் மற்றும் நாவலப்பிட்டி பொலிஸார் இணைந்து குறித்த சம்பவம் தொடர்பில் விசாணைகளை மேறகொண்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கிலிருந்து ஜனாதிபதி விடுதலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்கல் செய்த வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை கொழும்பு மாவட்ட நீதிபதி மகேஷ டி சில்வா அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததால், தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் முன்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​ரணில் விக்கிரமசிங்க சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் பூர்வாங்க ஆட்சேபனையை முன்வைத்ததுடன், தமது கட்சிக்காரர் தற்போது ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதால், அரசியலமைப்பின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என சுட்டிக்காட்டினர்.

அதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தற்போது வழக்குத் தொடர முடியாது என மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்து, பின்னர் இந்த உத்தரவை பிறப்பித்தது.