Home Blog Page 315

இன்றைய ராசிபலன் 01.03.2023

மேஷம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள் அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் நன்மைகள் ஏற்படும்.அவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்‌. வியாபாரத்தில் பற்றுவரவு உயரும். உத்தியோகத்தில் சில அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

ரிஷபம்

கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நல்லன நடக்கும் நாள்.

மிதுனம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.

கடகம்

திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

சிம்மம்

எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பலருக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கன்னி

சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள்‌. உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள்‌. உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உதவி செய்வார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். கடமை உணர்வுடன் செயல்படும் நாள்.

துலாம்

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். உற்சாகமான நாள்.

விருச்சிகம்

சந்திராஷ்டமம் இருப்பதால் சில வேலைகள் தடைப்பட்டு முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களை குறை சொன்னால் கோபப்படாதீர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக முடியும். பொறுமை அதிகம் தேவைப்படும் நாள்.

தனுசு

உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.

மகரம்

எதிர்பாராத பணவரவு கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான ‌திட்டங்கள் திட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கும்பம்

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள் வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

மீனம்

பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை கிடைக்கும்‌. மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

 

ஜனநாயகத்திற்காக போராடும் மக்களுடன் நாங்கள் ஒன்றாக நிற்போம்

தேர்தலை நடத்தக் கோரி மக்கள் விடுதலை முன்னணி நேற்று முன்தினம்(26) ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீதான அரச பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த நிவிதிகல நிமல் அமரசிறிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாச நேற்று (27) குளியாப்பிட்டியவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இரங்கல் தெரிவித்தார்.

தனது அரசியல் சித்தாந்தம் மற்றும் கொள்கைகள் தொடர்பில் பல்வேறு மாற்று அபிப்பிராயங்கள்காணப்படுகின்ற போதிலும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து எதிர்க்கட்சியில் செயற்படும் சகோதர அரசியல் கட்சியான மக்கள் விடுதலை முன்னனி நேற்று ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீதான தாக்குதலை கண்டிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த துயரச் செய்தி வெளியானவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மக்களிடம் தனது துயரத்தைப் பகிர்ந்து கொண்டார்.

மக்களின் அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையை தற்போதைய அரசாங்கம் பறித்துள்ளமைக்கு எதிராக தாம் வீதியில் இறங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மிருகத்தனமான,சர்வாதிகார, எதோச்சதிகார அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொலைக்குஜனாதிபதியும் அமைச்சரவையும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும், ஜனநாயகத்தைக் கோரி வீதியில் இறங்கியநிமல் அமரசிறி மீதான கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை ஒரு கட்சியாக ஐக்கிய மக்கள் சக்திகண்டிப்பதாகவும், இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி வேறுபாடின்றி தேர்தலைக் கோரி மக்கள் நடத்தும் இந்தபோராட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒரு கட்சியாக ஏகமானதாக ஒன்றுபடுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதியால் தேர்தலுக்கு பணம் இல்லை எனவும், பணம் வழங்க முடியாது எனவும், பணம்இருந்தாலும் தேர்தலை நடத்த முடியாது என்று கூறினாலும், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதி ராஜபக்சவை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு நிறுவனங்களின் அதிகாரத்தை தம்மிடம் பெற்று நாட்டு மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழரசு கட்சியின் செல்வாக்கினை கண்டு ஜனாதிபதி அஞ்சுகின்றார் – சாணக்கியன்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அச்சத்தில் உள்ளார் என்பது அவர் வெளியிட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளிப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இன்று (28) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட சந்திப்பு ஒன்றில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது குறித்த சந்திப்பில் பங்கேற்றிருந்த இலங்கை தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் தொடர்பிலும் இரா.சாணக்கியன் இதன்போது சில கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.

குறிப்பாக தெற்கில் தனக்கு மக்கள் பலம் இல்லை என்பதனையும், வடக்கு கிழக்கில் தமிழரசு கட்சிக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள செல்வாக்கினையும் கண்டு அஞ்சியே ஜனாதிபதி உள்ளுராட்சி மன்றத்தேர்தலினை ஒத்திவைக்க முற்படுகின்றார் என சந்தேகம் எழுந்துள்ளது எனவும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக பல பகுதிகளில் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில் அடந்த சில நாட்களுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உருப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாதிருக்க குறித்த திகதியில் தேர்தலை நடத்துவதே சிறந்தது எனவும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பணவீக்கம் வீழ்ச்சி

தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண்ணின் அடிப்படையில் நாட்டின் ஆண்டு பணவீக்கம் பெப்ரவரி மாதத்தில் 50.6% ஆகக் குறைந்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரங்கள் துறை இதனை தெரிவித்துள்ளது.

நாட்டின் ஆண்டு பணவீக்கம் கடந்த ஜனவரியில் 54.2% ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஓடும் பஸ்ஸில் யுவதியிடம் சில்மிஷம் – பொலிஸ் பரிசோதகர் கைது

பஸ்ஸில் பயணித்த யுவதி ஒருவரிடம் சில்மிஷம் செய்த குற்றச்சாட்டின் பேரில் தலைமை பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

பல்வேறு முறைப்பாடுகள் பிரிவுகளின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் 54 வயதுடைய தலைமை பொலிஸ் பரிசோதகரான இவர் களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையமொன்றைச் சேர்ந்தவராவார்.

அம்பலாங்கொடை நோக்கிப் பயணித்த பஸ்ஸில் பயணித்த பயிற்சி தாதி ஒருவருக்கு அருகில் நின்றிருந்த குறித்த பொலிஸ் பரிசோதகர் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டுள்ளதாகவும் இதனையடுத்து குறித்த பஸ்ஸில் சென்ற பயணிகள் ஆத்திரமடைந்து பரிசோதகரை தாக்கி பொலிஸில் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெல் பயிரிட்டு முழு ஆசியாவுக்கும் உணவளித்தோம் -முன்னாள் ஜனாதிபதி

இலங்கையில் நெல் பயிரிடப்பட்டு முழு ஆசியாவுக்கும் உணவளிக்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்க குறிப்பிட்டார்.

ஆனால் இன்றைய நிலவரப்படி உண்பதற்குக் கொஞ்சம் கூட சோறு இல்லாமல் மக்கள் மண்டியிடுகிறார்கள்.

களனியில் நடைபெற்ற புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாளை பாடசாலைகள் மூடப்படுமா ? – ஜோசப் ஸ்டாலின் விளக்கம்நாளை பாடசாலைகள் மூடப்படுமா ? – ஜோசப் ஸ்டாலின் விளக்கம்

அரசாங்கத்தின் அசாதாரண வரி அறவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை (மார்.01) நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.

இதன்படி, அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆசிரியர்கள் அனைவரும் நாளை கருப்பு நிற ஆடைகளை அணிந்து, கருப்பு பட்டிகளை அணிந்து பாடசாலைகளுக்கு பிரசன்னமாகுமாறு, ஜோசப் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும், பாடசாலை கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என அவர் மேலும் குறிப்பிட்டார்

பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு சம்பவம் : நான்கு தொழிலாளர்கள் பலி

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் ஹர்னாய் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்றுள்ளது.

இங்கு நேற்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நிலக்கரி சுரங்கத்தை சுற்றிவளைத்த பயங்கரவாதிகள் தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதில் 4 தெர்ழிலாளர்கள சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை வங்கி சேவைகள் ஸ்தம்பிதமடையும் சாத்தியம்?

நாடு தழுவிய ரீதியில் நாளைய தினம் (மார்.01) முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையில், ஏனைய வங்கிகளையும் இணைத்துக்கொள்ள கலந்துரையாடப்பட்டு வருவதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் ஷன்ன திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள வங்கி சேவைகள் நாளைய தினம் ஸ்தம்பிதமடையும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசாங்கத்தின் முறையற்ற வரி வசூலிப்பிற்கு எதிராக நாளை முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு, ஏனைய அனைத்து துறையினரும் ஆதரவை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தா

இதுதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனநாயகமா?

போராட்டத்தில் உயிர் நீத்த போராளியின் உயிருக்கு பதில் கூற வேண்டியதும் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேணடியதும் இந்த அரசாங்கமும் ஜனாதிபதியுமே. அன்று கட்சி ஆதரவாளர்களை வைத்து போராட்டகாரர்களை தாக்கினார்கள். இன்று காவல் துறையை வைத்து தாக்குகின்றார்கள். இதுதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனநாயகமா என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த மக்கள் எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (27) உயிரிழந்த போராட்டக்காரரின் குடும்பத்தாருக்கு மலையக மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று இந்த நாட்டில் நடைபெறுவது ஜனநாயகமா?அல்லது அராஜக அரசியலா? என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. இந்த நிலைமை தொடருமானால் சர்வதேச ரீதியில் எமக்கு உதவி செய்ய காத்திருக்கின்ற நாடுகளும் அரசசார்பற்ற நிறுவனங்களும் அந்த உதவிகளை செய்வதில் பின்வாங்கலாம். எனவே அரசாங்கம் ஜனநாயக போராட்டங்களை காவல்துறையினரை கொண்டு அடக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

ஜனாதிபதி இன்று பொறுப்பற்ற விதத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்றார்.தேர்தலை ஒரு விளையாட்டாக கருதுகின்றார். அது மக்களின் ஜனநாயக உரிமை என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நிலைமை தொடருமாக இருந்தால் மிக விரைவில் நாம் மலையக மக்களை ஒன்று திரட்டி அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஜனநாயக போராட்டம் ஒன்றை தலைநகரில் முன்னெடுப்போம். மக்களை தூண்டிவிட்டு அரசியல் செய்ய நினைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

ஜனநாயக நாடு ஒன்றில் தங்களுடைய கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. இதனை யாராலும் தடுக்க முடியாது.

அன்று ஆதரவாளர்களை வைத்து போராட்டகாரர்களை தாக்கியதால் கோட்டாபாய ராஜபக்ச தனது பதவியைவிட்டு ஒடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதே போல இந்த அரசாங்கமும் செயற்படுவதற்கு முற்பட்டால் ஜனாதிபதி ரணிலுக்கும் அதே நிலைமை ஏற்படும்.