Home Blog Page 319

வீட்டில் கிளிகளை வளர்த்த நடிகர் ரோபோ சங்கருக்கு அபராதம்

சென்னை வளசரவாக்கம், லட்சுமி நகர், 11-வது தெருவில் வசித்து வருபவர் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர். தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான இவர், பின்னர் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீடு குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் தனது வீட்டில் 2 கிளிகள் வளர்ப்பது குறித்து கூறி இருந்தார். இதுபற்றி யாரோ வனத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டுக்கு சென்றனர்.

அவரது வீட்டில் வளர்த்து வந்த 2 அலெக்சேண்டரியன் பச்சை கிளிகளையும் கூண்டோடு வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 2 கிளிகளும் கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக விசாரணை நடப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் உரிய அனுமதி பெறாமல், வீட்டில் வெளிநாட்டு ரக கிளைகளை வளர்த்ததன் காரணமாக நடிகர் ரோபோ சங்கருக்கு வனத்துறை சார்பில் ரூ.2.5 இலட்சம் (1,094,052.66 இலங்கை ரூபா) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம்

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ராஜ்கோட்டிற்கு வடமேற்கே 270 கி.மீ தூரத்திலும், 10 கி.மீ ஆழத்திலும் நேற்று மதியம் 3.30 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.3 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா, மேகாலயா மாநிலங்களை தொடர்ந்து குஜராத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

லேசான நில அதிர்வு என்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுத்தப்பட்ட பஸ் மீது மோதிய கெப் வாகனம்- சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக தனியார் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்ட போது, அதன் பின்னால் அதிவேகமாக வந்த கெப் வண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

அனுராதபுரத்திலிருந்து களுத்துறை நோக்கிச் செல்லும் பேருந்து ஒன்று அனுராதபுரம் பாதெனிய வீதியின் ஆரியகம சந்தியில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அப்போது, ​​பஸ்சின் பின்பகுதியில் பயணிகள் தங்களது பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

அப்போது, ​​அதிவேகமாக வந்த கேப், பேருந்தின் பின்னால் சென்ற மூன்று பயணிகள் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் படுகாயமடைந்த பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த ஏனைய இருவரும் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இரு பிள்ளைகளின் தாய் ஆற்றில் குதித்தமைக்கான காரணம் வெளியானது

இரண்டு குழந்தைகளையும் பாலத்தில் விட்டுவிட்டு பென்தர ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அங்கு தனது 18 மாத மகளையும், ஒன்பது வயது மகனையும் பாலத்தில் விட்டுவிட்டு பெந்தர ஆற்றில் குதித்துள்ளார்.

பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண், எல்பிட்டிய-உரகஸ்மன்ஹந்தி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ள நிலையில், இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று (26) பிற்பகல் அவர் தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு பெந்தர பாலத்தில் விட்டுவிட்டு சுமார் 40 அடி உயரத்தில் இருந்து நீருக்குள் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்த்தேக்கத்தில் மூழ்கிய பெண்ணை, அருகில் நீர் விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளைஞர் காப்பாற்றியுள்ளார்.

பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண், மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளார்.

மேலும், அவரது இரண்டு குழந்தைகளும் அளுத்கம பொலிஸார் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பணியகத்தின் அதிகாரிகளின் பாதுகாப்பில் உள்ளனர்.

குறித்த பெண் தனது இரண்டு பிள்ளைகளுடன் கணவர் வசிக்கும் எல்பிட்டிய பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது, ​​வீட்டுக்கு வேண்டாம் என குறித்த பெண்ணுக்கு கணவன் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தமையே பாலத்தில் இருந்து குதித்தமைக்கான காரணம் என தற்போது தெரியவந்துள்ளது.

பென்தர பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐ.தே.க. தலைமையில் புதிய கூட்டணி?

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு முன் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட உள்ளூராட்சி சபை வேட்பாளருடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வவுனியாவில் பஸ் துவிச்சக்கரவண்டி மீது மோதியதில் குடும்பஸ்தர் பலி

வவுனியா, ஏ9 வீதியில் உள்ள மூன்றுமுறிப்பு பகுதியில் நேற்று (26) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா, ஏ9 வீதியில் உள்ள மூன்றுமுறிப்பு பகுதியில் துவிச்சக்கர வண்டியில் குடும்பஸ்தர் ஒருவர் பயணித்துக்கொண்டிருந்தபோது, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று துவிச்சக்கர வண்டியின் மீது மோதியுள்ளது.

துவிச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போது, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இ.போ.ச பஸ் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் போட்டி போட்டுக்கொண்டு வீதியில் சென்றமையால் இவ்விபத்து இடம்பெற்றதாக விபத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

துருக்கி-சிரியா நிலநடுக்க பேரழிவு : கட்டிட ஒப்பந்ததாரர்கள் 184 பேர் கைது – 600 பேரிடம் விசாரணை

துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6-ம் திகதி ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகள் அளவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம் துருக்கியிலும், அதன் அண்டை நாடான சிரியாவிலும் பேரழிவை ஏற்படுத்தியது.

இருநாடுகளிலும் நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. துருக்கியில் மட்டும் 44 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் பறிபோயின.

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், அதிகப்படியான உயிர் சேதத்துக்கு மோசமான கட்டுமானமே காரணம் என துருக்கியை சேர்ந்த கட்டிடவியல் நிபுணர்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

அந்த நாட்டின் கட்டுமான விதிப்படி நிலநடுக்கத்தை எதிர்கொள்வதற்கான பொறியியல் தர அளவு பின்பற்றப்பட வேண்டும். இந்த விதிமுறையை உரிய வகையில் அமல்படுத்தாமல் ஊழல் செய்து கட்டுமான பணிகளே மேற்கொண்டதாலேயே ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோனதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த கட்டுமான ஊழல் குறித்து அந்த நாட்டின் நீதித்துறை விசாரித்து வருகின்றது.

இந்த நிலையில் குறித்த விசாரணை தொடர்பாக இதுவரை கட்டிட ஒப்பந்ததாரர்கள், கட்டிட உரிமையாளர்கள் உட்பட 184 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக துருக்கி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பாக 600-க்கும் அதிகமானோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாவும், இன்னும் ஆயிரக்கணக்கானோரை கைது செய்ய நீதித்துறை பிடிவாரண்டு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஊழியர்களை தொடர்ந்து ரோபோக்களை பணிநீக்கம் செய்யும் கூகுள்!

கூகுள் நிறுவன அலுவலக வளாகத்தில் கதவை திறப்பது, மேசைகளை துடைப்பது, குப்பைகளை அகற்றுவது, நாற்காலிகளை வரிசைப்படுத்துவது என அன்றாட பணிகளை செய்ய ரோபோக்கள் களமிறக்கப்பட்டன.

இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு, சுமார் 100 ரோபோக்கள் வேலையை செய்து வருவதாக தகவல் வெளியாகியது.

ரோபோக்கள் எந்த மாதிரியான வேலையை செய்ய வேண்டும் என்பது அதில் பொருத்தப்படும் கம்ப்யூட்டர்களில் பதிவேற்றப்பட்டு வடிவமைக்கப்பட்டன.

இந்நிலையில், செலவைக் குறைப்பதற்காக உணவு விடுதி மேசைகளைச் சுத்தம் செய்யவும், குப்பைகளைத் தனித்தனியாகவும், கதவுகளைத் திறக்கவும் பயிற்சி பெற்ற ரோபோக்களை நீக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் தொடர்பு கூகுளின் நிர்வாக இயக்குனர் டெனிஸ் காம்போவா தெரிவிக்கையில்,

“தினசரி ரோபோக்கள் இனி எழுத்துக்களுக்குள் தனித் திட்டமாக இருக்காது. சில தொழில்நுட்பங்களும் குழுவின் ஒரு பகுதியும் கூகுள் ஆராய்ச்சியில் இருக்கும் ரோபாட்டிக்ஸ் முயற்சிகளில் ஒருங்கிணைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உலகெங்கிலும் உள்ள ட்விட்டர், மைக்ரோசொப்ட் மற்றும் யாகூ போன்ற நிறுவனங்கள் உட்பட தொழில்நுட்பத் துறை, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் செலவுகளைக் குறைக்க கடந்த ஆண்டு முதல் பணிநீக்கங்களைச் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கியூபாவில் பாரிய காட்டுத்தீ

கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவில் இருந்து சுமார் 800 கி.மீ. தொலையில் உள்ள ஹால்குவின் மாகாணத்தில் ‘பினாரஸ் டி மயாரி’ என்ற மலைத்தொடர் அமைந்துள்ளது.

அடர்ந்து வளர்ந்த காட்டு மரங்களும், தேயிலை தோட்டங்களும் இந்த மலைத்தொடரில் நிறைந்து காணப்படுகின்றன.

இந்த மலைத்தொடரில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த 18-ம் திகதி காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

காற்றின் வேகம் காரணமாக இந்த காட்டுத்தீ மிக வேகமாக பரவியது.

இன்றோடு ஒரு வாரமாக தொடர்ந்து எரிந்து வரும் இந்த காட்டுத்தீயை அணைப்பதற்காக தீயணைப்பு படையினர் இரவு, பகலாக போராடி வருகின்றனர்.

இந்த காட்டுதீயால் இதுவரை சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.

தொடர்ந்து பற்றி எரியும் இந்த காட்டுத்தீயை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க தயார் : டென்மார்க் அரசாங்கம் அறிவிப்பு-!

உக்ரைன்-ரஷ்யா போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஏராளமான ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க வேண்டும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

ஆனால் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் போர் விமானங்களை வழங்க தயக்கம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க் உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன.

இது குறித்து அந்த நாட்டின் இராணுவ அமைச்சர் டிரோல்ஸ் லண்ட் பால்சன் தெரிவிக்கையில்,

‘உக்ரைன்-ரஷ்யா போரில் ஒரு கட்டத்தில் போர் விமானங்களின் பங்களிப்பு என்பதை மறுக்க முடியாது. எனவே ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிரான உக்ரைனின் தற்காப்புக்கு உதவ எப்-16 ரக போர் விமானங்களை வழங்க டென்மார்க் அரசாங்கம் தயாராக இருக்கின்றது’ என தெரிவித்துள்ளார்.