Home Blog Page 321

இத்தாலியில் படகு கவிழ்ந்து 59 அகதிகள் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வறுமை , உள்நாட்டு போர் உள்ளிட்ட காரணங்களால் இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

கடலில் ஆபத்தான முறையில் செல்லும் அவர்கள் அடிக்கடி விபத்துகளையும் சந்தித்து வருகின்றனர்.

அந்தவகையில் 100-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க அகதிகளுடன் சென்று கொண்டிருந்த படகு ஒன்று இத்தாலியின் கலாபிரியா கடற்பகுதியில் சென்றபோது திடீரென கடலில் மூழ்கியது.

இதில், 59-க்கும் மேற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர்.

இதுவரை 59 உடல்களை மீட்டுள்ள இத்தாலி கடலோர மீட்புப் படையினர், சம்பவ இடத்தில் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தாலி கடற்பகுதியில் படகு விபத்தில் 59-க்கு மேற்பட்ட அகதிகள் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் பல்கலைகழகம்

ஹோமாகம – பிட்டிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் இன்று (27) முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது.

முதலாம் வருட மாணவர்களுக்காக மாத்திரம் இன்று பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என அதன் உபவேந்தர் மஹோபாத்யாய பேராசிரியர் பூஜ்ய நெலுவே சுமனவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

புதிய மாணவர்களை சித்திரவதை செய்த சம்பவத்தின் அடிப்படையில், ஹோமாகம – பிட்டிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை கடந்த வருடம் டிசம்பர் 19 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு அதன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

நண்பனுடன் சென்ற இளைஞன் பலி

நண்பர் ஒருவருடன் நானுஓயா டெஸ்போட் கால்வாயில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நானுஓயா டெஸ்போட் தோட்டத்தின் மேல் பகுதியைச் சேர்ந்த மகதேவன் சதீஷ்குமார் என்ற 18 வயதுடைய இளைஞனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு பகுதியில் தொழில் செய்து வந்த உயிரிழந்த இளைஞன், நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று அவருடன் டெஸ்போட் கால்வாயில் பிற்பகல் 1 மணியளவில் நீராடச் சென்றுள்ளார்.

நீராடச் சென்ற இளைஞன் திடீரென கால்வாயில் மூழ்கி காணாமல் போயுள்ளதுடன், இளைஞனைக் காணாததால், நுவரெலியா பொலிஸ் பிரிவின் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது.

பின்னர், அதிகாரிகள் வந்து கால்வாயில் சுமார் 10 அடி ஆழத்தில் இருந்து இளைஞரின் சடலத்தை மீட்டனர்.

சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.