அமெரிக்காவில் சைபர் தாக்குதல் – மருத்துவ சேவை பாதிப்பு

Date:

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் உள்ள வைத்திய சாலைகளில் இணைய தளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

கலிபோர்னியா, கனெக்டிகட், பென்சில்வேனியா, ரோட் தீவு உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இந்த சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளன.

இதனால் வைத்தியசாலைகளில் உள்ள கணினி அமைப்புகள் முடங்கியது. இதையடுத்து மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைகள், வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் பிற சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

சில அவசர அறைகள் மூடப்பட்டன. சைபர் தாக்குதல் மூலம் வைத்தியசாலைகளின் தகவல்களை திருட வாய்ப்பு இருந்ததால் அதை தடுக்க, சர்வர்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து சைபர் தாக்குதலில் இருந்த கணினி அமைப்புகளை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...