அமெரிக்க ஓபன் டெனிஸ் – செம்பியன் பட்டத்தை வென்றார் கோகோ காஃப்

Date:

அமெரிக்க ஓபன் டெனிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் 19 வயதே ஆன கோகோ காஃப் இறுதிப் போட்டியில் வென்று கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்று அசத்தியுள்ளார்.

19 வயதான கோகோ காஃப் அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டிக்கு நுழைந்த போதே பரபரப்பு தொற்றிக் கொண்டது.

ஆனாலும், தரவரிசையில் முதல் இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வரும் அரினா சபலென்காவை காஃப் வீழ்த்துவது கடினம் என்றே பலரும் எண்ணினர்.

எனினும் அந்த எண்ணத்தை தகர்த்து கோகோ காஃப் 2 – 6, 6 – 3, 6 – 2 என்ற செட் கணக்கில் அரினாவை வீழ்த்தி அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.

இதற்கு முன், 1999ஆம் ஆண்டு, தன் 18 வயதில் செரீனா வில்லியம்ஸ் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்று சாதனை புரிந்து இருந்தார்.

அப்போது அவர் புகழ் பெற்ற மார்ட்டினா ஹிங்கிஸ்-ஐ வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையை செய்து இருந்தார்.

அவருக்கு அடுத்து தற்போது 19 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மகளிர் வீராங்கனை கோகோ காஃப்தான்.

இந்தப் போட்டியில் கடைசி வெற்றிப் புள்ளியை பெற்றவுடன் கீழே விழுந்து தன் வெற்றியை நம்ப முடியாமல் ஆனந்தக் கண்ணீரில் மிதந்தார்.

தன் குடும்பத்தினருக்கு அங்கிருந்தே தொலைபேசியில் பேசினார். அவரது தாய் தன் மகளின் வெற்றியை கண்டு மகிழ்ச்சியில் உறைந்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...