ஆடை அணியாத கிராமத்து பெண்கள் ; 5 நாட்களுக்கு நடக்கும் விநோத பழக்கம்

Date:

மழைக்கால மாதத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு அந்தக் கிராமத்தில் இருக்கும் பெண்கள் ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக இருக்க வேண்டும். இந்த விநோத வழக்கம் இப்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது….

ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என உலகம் முழுவதும் சமத்துவம் பேசி வரும் நிலையில், உலகின் சில பகுதிகளில் இன்னும் பெண்களுக்கு எதிரான சில பழக்கவழக்கங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த பழக்க வழக்கங்களை பாரம்பரியம் எனக் கூறி பெண்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சில சமூக குழுக்கள் வலியுறுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு விநோத மூடப்பழக்க வழக்கம் இந்தியாவில் இருக்கும் கிராமம் ஒன்றில் இப்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டின் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் ஐந்து நாட்கள் அந்தக் கிராமத்தில் இருக்கும் பெண்கள் ஆடை அணியக் கூடாது என்ற வழக்கம் தான் அது.

இமாச்சலப்பிரதேசத்தில் இருக்கும் மணிகாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் இருக்கும் ஒரு கிராமம் பினி. இந்த கிராமத்தில் தான் இந்த விநோத வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. அதாவது மழைக்கால மாதமான சவான் மாதத்தில் குறிப்பிட்ட ஐந்து நாட்களுக்கு இந்த கிராமத்தில் இருக்கும் பெண்கள் யாரும் எந்த உடையும் அணியக் கூடாது. அதை மீறி ஆடை அணிபவர்களுக்கு கெட்டது நடக்கும் என்று இன்றும் நம்பப்படுகிறது.

இந்த நாட்களில் கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளக் கூடாது. அதோடு கணவனும் மனைவியும் தனித்தனியே இருக்க வேண்டும். இந்த நாட்களில் ஆண்களுக்கும் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதாவது, இந்த ஐந்து நாட்களில் கிராமத்தில் இருக்கும் ஆண்கள் மது அருந்தக் கூடாது. அசைவம் சாப்பிடக் கூடாது… இப்படி ஆண்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதை எந்த ஆணும் மீறக் கூடாது.

பல ஆண்டுகளாக இந்த விநோத வழக்கத்தை அந்த கிராம மக்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். இதை தங்களின் பாரம்பரிய வழக்கம் என்கிறார்கள் அந்த கிராமத்து மக்கள். இதற்கு பின்னால் ஒரு கதையும் உள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் இருக்கும் மணிகாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள இந்த பினி கிராமத்தை சில பிசாசுகள் பிடித்திருந்ததாம்.

அப்பொழுது லூனா கோத் தேவி அந்த கிராமத்திற்கு வந்ததும் பிசாசுகள் எல்லாம் அழிந்தது என்றும் அன்றிலிருந்து இந்த வழக்கம் கிராமத்திற்கு வந்தது என்றும், அதற்கு முன்னர் அழகாக ஆடை உடுத்தியிருந்த பெண்களை பிசாசுகள் பிடித்து செல்லும் என்றும், அதை நினைவில் வைத்து 5 நாட்கள் இந்த விழா கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த பழக்கத்தை இன்றும் அந்த கிராம மக்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...