ஆப்கான் வீரரை கட்டிப்பிடித்து அழுத இந்திய சிறுவன்! காரணம் என்ன? நெகிழ்ச்சி வீடியோ வைரல்

Date:

இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்திய பின்னர், இந்திய சிறுவன் வீரர் ஒருவரை கட்டிப்பிடித்து அழுதது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15ஆம் திகதி டெல்லியில் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 69 இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஏனென்றால் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை சிறிய அணியான ஆப்கானிஸ்தான் வீழ்த்தியிருப்பது தான். இந்தப் போட்டியில் 16 பந்துகளில் 28 ஓட்டங்கள் விளாசியதுடன், 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ஆப்கான் வீரர் முஜீப் உர் ரஹ்மான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

 

இந்த நிலையில் முஜீப் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் சிறுவன் ஒருவன் அவரை கட்டியணைத்து அழுகிறான். ஆனந்த கண்ணீரை அவன் வெளிப்படுத்தும் வகையில் அந்த வீடியோ உள்ளது. எனினும், முஜீப்பே அவரது பதிவில் குறித்த சிறுவன் யார், ஏன் அவன் அழுகிறான் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

அவரது பதிவில், ‘இது ஆப்கானி சிறுவன் அல்ல, எங்கள் வெற்றியில் மகிழ்ச்சியாக உள்ள ஒரு இளம் இந்திய சிறுவன். இந்தியாவைச் சேர்ந்த இந்த குட்டி பையனை நேற்று இரவு டெல்லியில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது (கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல, இது ஒரு உணர்வு) நேற்றிரவு எங்களுக்கு ஆதரவளித்த அன்பும், ஆதரவும் மிகப்பெரியது.

உங்கள் தொடர்ச்சியான ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மேலும், எதிர்காலத்தில் நீங்கள் தொடர்ந்து எங்களை ஆதரிப்பதற்காக எங்களால் காத்திருக்க முடியாது. டெல்லியின் அன்புக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.

முஜீப்பின் இந்த பதிவுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் ஆதரவையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...