ஆர்ஆர்ஆர் திரைப்பட வில்லன் நடிகர் திடீர் மரணம்

Date:

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் திகதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனையும் நிகழ்த்தியது.

இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை வென்று சாதனை படைத்தது.

இதனிடையே, ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் வில்லனாக ராய் ஸ்டீவ்சன் (வயது 58) நடித்திருந்தார்.

அயர்லாந்து நாட்டின் லிஸ்பர்ன் நகரில் 1964 ஆம் ஆண்டு பிறந்த ராய் ஸ்டீவ்சன் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் மிகவும் கொடூரமான பிரிட்டிஷ் கவர்னர் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

இவர் பிரபல ஆங்கில படமான ‘தோர்’ படத்திலும், பிரபல வெப் தொடரான ‘ரோம்’ ஆகியவற்றிலும் நடித்து பிரபலமடைந்தார்.

இந்நிலையில், நடிகர் ராய் ஸ்டீவ்சன் (வயது 58) நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) திடீரென உயிரிழந்தார். அவரது உயிரிழப்பிற்கான காரணம் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. ஆர்ஆர்ஆர் திரைப்பட வில்லன் நடிகர் ஸ்டீவ்சன் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...