ஆர்சிபி ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. விராட் கோலி அபார சதம்.! GT-க்கு கடின இலக்கை நிர்ணயித்த RCB

Date:

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் விராட் கோலியின் அபாரமான சதத்தால் 20 ஓவரில் 197 ரன்களை குவித்த ஆர்சிபி அணி, 198 ரன்கள் என்ற கடின இலக்கை குஜராத் டைட்டன்ஸுக்கு நிர்ணயித்தது.

ஐபிஎல் 16வது சீசன் லீக் சுற்று இன்றுடன் முடிகிறது. கடைசி லீக் போட்டியில் ஆர்சிபி – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி தான் பிளே ஆஃபிற்கு முன்னேறும் கடைசி அணியை தீர்மானிக்கும் முக்கியமான போட்டி.

குஜராத் டைட்டன்ஸ், லக்னோ, சிஎஸ்கே அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டன. கடைசி அணியாக முன்னேறுவதற்கு மும்பை – ஆர்சிபி இடையே கடும் போட்டி நிலவுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி சன்ரைசர்ஸை வீழ்த்தி புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு முன்னேறிவிட்டது.

ஆர்சிபி அணி கடைசி போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தினால் நெட் ரன்ரேட் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸை பின்னுக்குத்தள்ளி பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். ஆர்சிபி தோற்றால் மும்பை அணி பிளே ஆஃபிற்கு தகுதிபெறும். எனவே வாழ்வா சாவா போட்டியில் வெற்றி கட்டாயத்துடன் குஜராத் டைட்டன்ஸை எதிர்கொண்டு ஆடிவருகிறது ஆர்சிபி அணி.

பெங்களூருவில் மழை காரணமாக தாமதமாக தொடங்கப்பட்ட இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

ஆர்சிபி அணி:

விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேல், வைன் பார்னெல், முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்.

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ஷுப்மன் கில், ரிதிமான் சஹா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தசுன் ஷனாகா, டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், மோஹித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி, யஷ் தயால்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் ஃபாஃப் டுப்ளெசிஸ் அதிரடியாக தொடங்கினர். ஆனால் டுப்ளெசிஸ்28 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மேக்ஸ்வெல்லும் 11 ரன்னுக்கு நடையை கட்டினார். மஹிபால் லோம்ரோரும் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் கோலியுடன் ஜோடி சேர்ந்த மைக்கேல் பிரேஸ்வெல் அடித்து ஆடி 16 பந்தில் 26 ரன்கள் அடித்து அவரும் அவுட்டானார். தினேஷ் கார்த்திக் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று அதிரடியாக பேட்டிங் ஆடிய விராட் கோலி சதமடித்தார். கடந்த போட்டியில் சதமடித்த விராட் கோலி, இந்த போட்டியிலும் சதமடித்து அசத்தினார். அடுத்தடுத்து 2 இன்னிங்ஸ்களில் 2 சதங்களை அடித்து அசத்தினார்.

ஆர்சிபி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய போட்டியில் பொறுப்புடன் பேட்டிங் ஆடி சதமடித்து கடைசிவரை களத்தில் நின்று தனி ஒருவனாக ஆர்சிபியை கரைசேர்த்தார் கோலி. கோலியின் அதிரடி சதத்தால் 20 ஓவரில் 197 ரன்களை குவித்த ஆர்சிபி அணி, 198 ரன்கள் என்ற கடின இலக்கை குஜராத் டைட்டன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...