இந்தியாவிற்கு 200 ரன்கள் வெற்றி இலக்கு

Date:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணிக்கு 200 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ‘சுழல்’ வீரர் ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார்.
இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய ‘லெவன்’ அணியில் உடற்தகுதி பெறாத சுப்மன் இடம்பெறவில்லை. சுழற்பந்துவீச்சாளர் அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைத்தது. இவருடன் சேர்த்து ஜடேஜா, குல்தீப் என மூன்று ‘சுழல்’ வீரர்கள் இடம்பெற்றனர்.

ஜடேஜா அபாரம்

ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், மிட்சல் மார்ஷ் ஜோடி துவக்கம் தந்தது. முதல் ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய பும்ரா, ஒரு ரன் மட்டுமே தந்தார். மீண்டும் வந்த பும்ரா, இம்முறை மிட்சல் மார்சை டக் அவுட்டாக்கினார். ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சில் வார்னர் இரண்டு பவுண்டரி அடித்தார். குல்தீப் ‘சுழலில்’ வார்னர் (41) ஆட்டமிழந்தார். சுழற்பந்துவீச்சாளர் ஜடேஜா மிரட்டினார். இவர் வீசிய ‘சுழல்’ வலையில் ஸ்டீவ் ஸ்மித் (46), லபுசேன் (27), கேரி (0) சிக்கினர். மேக்ஸ்வெல் 15 ரன்னில் திரும்பினார். அஷ்வின் பந்துவீச்சில் கிரீன் (8) அவுட்டானார். கேப்டன் கம்மின்ஸ் (15) நிலைக்கவில்லை. ஸ்டார்க் 28 ரன் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் 199 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...