இன்றைய ராசிபலன் 10.05.2023

Date:

மேஷம்

கணவன் – மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

ரிஷபம்

சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலே ஒருவித படபடப்பு தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். கவனம் தேவைப்படும் நாள்.

மிதுனம்

சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். மனைவி வழியில் அனுகூலம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வாசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

கடகம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் உறவினர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். விஐபிகள் அறிமுகம் ஆவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.

சிம்மம்

குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உங்களை சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்துகொள்வீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

கன்னி

பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பயணங்கள் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்கள் பிரச்னை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்

குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டு அறிந்து பூர்த்தி செய்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.

விருச்சிகம்

உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். மாற்றாக வாங்கி இருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவுவார்கள். பழைய பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

தனுசு

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். அடுத்தவர்களின் மனசு காயம் படும்படி பேசாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தர வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் கவனம் செலுத்துவது நல்லது. எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.

மகரம்

கணவன் – மனைவிக்குள் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். யாரையும், யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளுடன் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கும்பம்

குடும்பத்தாரின் ஆதரவு பிறக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரம் தழைக்கும். புது ஒப்பந்தம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

மீனம்

எதையும் தாங்கும் மனோபலம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களின் மீது பாசமழை பொழிவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்பொழுது உங்களுக்கு உதவி செய்ய உங்களை நாடுவார்கள். வியாபாரத்தில் புதிய, புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்பு கூடும் நாள்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிசிசிஐ புறக்கணித்த நிலையில் கேஎல் ராகுல் குறித்து எல்எஸ்ஜி டுவிட் பதிவு

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டி20...

ஸ்டாயினிஸ் அதிரடி- மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய லக்னோ

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்...

மீண்டும் வருகிறது Nokia 3210

கடந்த 1999 ம் ஆண்டு Nokia 3210 மொபைல் போன் வெளியானது....

விளையாட்டு வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு நல்லது – குரங்கு பெடல் டிரைலர்

சிவகார்த்திகேயன் தற்பொழுது அமரன் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் திரைப்படத்திலும் நடித்து...