இலங்கையில் அதிகரித்து வரும் புற்று நோய்

Date:

தற்போது நாட்டில் புற்று நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டுவேலைத் திட்டம் தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பணிப்பாளரும், சமூக பல் மருத்துவ நிபுணருமான இஷானி பெர்னாண்டோ, இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நிகழும் மரணங்களுக்கான காரணிகளில் இரண்டாவது இடத்தில் புற்றுநோய் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையில் இறப்புக்கு இரண்டாவது முக்கிய காரணம் புற்றுநோய். பதிவாளர் திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைய 2019 ஆம் ஆண்டில் 15,599 பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர், 2020 இல், 37,649 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் நாங்கள் மிகப்பெரிய அதிகரிப்பைக் காண்கிறோம். ஆண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் வாய் புற்று நோயே அதிகளவில் காணப்படுகிறது. எனக்கு தெரிந்தவரை புகையிலை பயன்பாட்டை குறைக்க போதிய திட்டங்கள் இல்லை. எனவே நம் நாட்டில் புகையிலைக்கு எதிராக அதிக வேலைத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்”

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...