ஐதராபாத்தை வீழ்த்தி 16 புள்ளிகளுடன் ஆர்சிபி முடிவுக்காக காத்திருக்கும் மும்பை

Date:

ஐபிஎல் தொடரில் மும்பையில் இன்று நடைபெறும் 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் விவாந்த் சர்மா, மயங்க் அகர்வால் இருவரும் அரை சதம் கடந்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்த நிலையில், விவாந்த் சர்மா 69 ரன்னில் வெளியேறினார். அடுத்து மயங்க் அகர்வால் 83 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.மும்பை அணியின் ஆகாஷ் மத்வால் 4 விக்கெட் கைப்பற்றினார்.

இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 14 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து கேப்டன் ரோகித் சர்மாவுடன் கேமரூன் கிரீன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தனர்.

2வது விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 56 ரன்னில் ஆட்டமிழந்தார். கேமரூன் கிரீன் சதமடித்து 100 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில், மும்பை அணி 201 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 16 புள்ளிகள் பெற்ற மும்பை அணி அடுத்து நடைபெற உள்ள ஆர்.சி.பி. அணியின் முடிவுக்காக காத்திருக்கிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...