கம்பஹா பகுதியில் 10 மணித்தியால நீர்வெட்டு!

Date:

ரன்பொகுனுகம மற்றும் கிரிந்திவெல நீர் வழங்கல் அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் சுமார் 10 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று காலை 8.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி பூகொட, கிரிந்திவல, ரன்பொகுனுகம வீடமைப்புத் தொகுதி, வத்துபிட்டிவல, மாஹிம்புல, மதுவெகெதர, ஊராபொல மற்றும் அத்தனகல்ல ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று நீர் வழங்கல் அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று அதிகாலை 4.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை 9 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அக்கரைப்பற்று, இறக்காமம், அட்டாளைச்சேனை, ஒலுவில் மற்றும் பாலமுனை ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...