கால்களை தொடலாமா.. வேண்டாம்… மரியாதை கொடுத்து விலகிய பாபர் அசாம்!

Date:

உலகக்கோப்பை தொடரின் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்தது.

பாகிஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக ஆடிய பாபர் அசாம் 92 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்தார். ஆட்டத்தில் பாபர் அசாம் அரைசதம் விளாசிய போது, சேப்பாக்கம் மைதானமே அதிரும் அளவிற்கு ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர்.

இந்த நிலையில் பேட்டிங்கின் போது பாபர் அசாம் செய்த சம்பவம் ரசிகர்களிடையே அவர் மீது கூடுதல் மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.

பாபர் அசாம் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அவரின் ஷூ லேஸ் அவிழ்ந்தது. இதனால் ஷூ லேஸை கட்டுவதற்காக பாபர் அசாம், யாரின் உதவியையும் நாடாமல் கைகளில் அணிந்திருந்த கிளஸை கழற்றிவிட்டு ஷூ லேஸை கட்ட முயற்சித்தார்.

இதனை பார்த்து கொண்டிருந்த ஆஃப்கானிஸ்தான் அணியின் மூத்த வீரர் முகமது நபி, அவருக்கு உதவி செய்ய முன் வந்தார்.

பாபர் அசாம் அணிந்திருந்த ஷூ லேஸை கட்ட நேரடியாக நபி முயற்சித்த போது உடனடியாக கால்களை நகர்த்தி அவராகவே ஷூ லேஸை கட்டி கொண்டார்.

எதிரணியை சேர்ந்த வீரர் என்றாலும் மூத்த வீரர் என்ற மரியாதையுடன் பாபர் அசாம் செயல்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நான் ஹீரோ இல்ல… அவர்தான் ஹீரோ – சந்தானம்

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர்...

அடுத்த வருடம் மே மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்த திட்டம்

இந்தியா ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்துவது போல் பாகிஸ்தானும் பிஎஸ்எல்...

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது- ஷேன் வாட்சன்

வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான...

13.4 ஒவரில் இலக்கை எட்டி ஆர்சிபி அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு...