40 பந்தில் 100! அசுர தாண்டவமாடிய மேக்ஸ்வெல்..மைதானத்தில் சிக்ஸர் மழை

Date:

அவுஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 40 பந்துகளில் சதம் விளாசினார்.

நெதர்லாந்துக்கு 400 இலக்கு

டெல்லியில் நடந்து வரும் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 399 ஓட்டங்கள் குவித்துள்ளது.

டேவிட் வார்னர் 104 ஓட்டங்களும், ஸ்மித் 71 ஓட்டங்களும், லபுசாக்னே 62 ஓட்டங்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் களம் கண்ட மேக்ஸ்வெல் சரவெடியாய் வெடித்தார். எதிரணியை பந்தாடிய அவர் தொடர்ந்து ஒரே ஒவரில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் தொடர்ந்து அடித்து சதத்தை எட்டினார்.

அதிலும் 40 பந்துகளில் சதம் விளாசி மேக்ஸ்வெல் சாதனை படைத்தார். உலகக்கோப்பையில் அடிக்கப்பட்ட அதிவேக சதம் இதுவாகும்.

மொத்தம் 44 பந்துகளை எதிர்கொண்ட மேக்ஸ்வெல் 8 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 106 ஓட்டங்கள் குவித்தார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...