சந்திரயான்-3 ‘விக்ரம்’ லேண்டா் எடுத்த புதிய புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ

Date:

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த ‘விக்ரம்’ லேண்டா் எடுத்த புதிய புகைப்படங்களை இஸ்ரோ இன்று (21) வெளியிட்டுள்ளது.

‘சந்திரயான்-3’ திட்டத்தின் முக்கிய நிகழ்வாக உந்துகலனிலிருந்து லேண்டா் கடந்த வியாழக்கிழமை வெற்றிகரமாக விடுவிக்கப்பட்ட பிறகு அவை ஒன்றன்பின் ஒன்றாக நிலவையொட்டிய சுற்றுவட்டப்பாதையில் வலம் வந்தன.

தொடா்ந்து, லேண்டா் கலனின் உயரத்தை படிப்படியாக குறைத்து நிலவில் தரையிறக்குவதற்கான பணிகளில் இஸ்ரோ தற்போது தீவிரம் காட்டி வருகிறது.

அதன்படி, நேற்று நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமாக குறைந்தபட்சம் 25 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதைக்கு லேண்டா் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவே, சுற்றுப் பாதை தொலைவைக் குறைப்பதற்கான இறுதி நடவடிக்கை.

லேண்டர் தரையிறங்கும் நிலவின் மேற்பரப்பின் தன்மையை அறிந்து அதற்கேற்ப தரையிறக்க உதவும் வகையில் லேண்டரில் எல்.எச்.டி.ஏ.சி அதிநவீன கெமரா பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எல்.எச்.டி.ஏ.சி அதிநவீன கெமரா எடுத்துள்ள நிலவின் 4 புகைப்படங்களை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...