சுனாமி முன் எச்சரிக்கை பயிற்சி பற்றிய அறிவிப்பு

Date:

திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள கரையோர சமூகங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் தயார்நிலையை சோதிக்கும் பிராந்திய சுனாமி உருவகப்படுத்துதல் பயிற்சி நாளை (04) நடைபெறவுள்ளது.

பிரதி சபாநாயகர்  அஜித் ராஜபக்ஷ இன்று (03) பாராளுமன்றத்தில் இதனை அறிவித்தார்.

இவ்வாறு இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுனாமி முன்னெச்சரிக்கை பொறிமுறைகளை தேசிய மட்டத்திலிருந்து கிராம மட்டம் வரை மதிப்பீடு செய்யும் நோக்கில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் இந்த பயிற்சியை முன்னெடுத்துள்ளதாக பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.

அத்துடன், கரையோர மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 26,000 ஐ எட்டியுள்ளது.

மழையினால் இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, கம்பஹா, மாத்தறை, காலி, நுவரெலியா, புத்தளம், குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, அந்த மாவட்டங்களில் 6,250 குடும்பங்களைச் சேர்ந்த 25,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதுவரை 2 வீடுகள் முழுமையாகவும், 453 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

எவ்வாறாயினும், 31 குடும்பங்களைச் சேர்ந்த 124 பேர் 3 பாதுகாப்பான இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...