ஜனாதிபதி வௌிநாட்டு விஜயம்

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

15ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை கியூபாவின் ஹவானாவில் நடைபெறவுள்ள “G77+ சீனா” அரச தலைவர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78ஆவது வருடாந்த அமர்வின் அரச தலைவர்கள் மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-649 ரக விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 03.15 மணியளவில் டுபாய் நோக்கி ஜனாதிபதி உள்ளிட்ட துாதுக்குழுவினர் புறப்பட்டதாக செய்தியாளர் தெரிவித்தார்.

துபாயில் இருந்து ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் மற்றொரு விமானத்தில் அமெரிக்கா செல்லவுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...