டுவிட்டரில் அறிமுகமாகும் வொய்ஸ் – வீடியோ கோல் வசதி

Date:

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு ஒக்டோபரில் 44 பில்லியன் டொலருக்கு டுவிட்டரை விலைக்கு வாங்கினார். அதனை தொடர்ந்து டுவிட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார்.

டுவிட்டரில் விரைவில் வொய்ஸ் – மற்றும் வீடியோ கோல்வசதியை அறிமுகம் செய்யவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் 4,400 கோடி டடொலரில் (சுமாா் ரூ.3.64 லட்சம் கோடி) டுவிட்டா் நிறுவனத்தை கையகப்படுத்தியதையடுத்து, கடந்தாண்டு ஒக்டோபா் மாதம் அதன் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பொறுப்பேற்றாா். இதைத் தொடா்ந்து பணியாளா்கள் நீக்கம், பதிவிடும் முறையில் நவீனமயமாக்கம், டுடிவிட்டர் ப்ளூ டிக்கிற்கு கட்டணம் உள்ளிட்ட அவரது அதிரடி நடவடிக்கைகள் சா்ச்சைக்குள்ளாகின.

இந்நிலையில்,டுவிட்டரில் விரைவில் வொய்ஸ் மற்றும் வீடியோ கோல் வசதியை அறிமுகம் செய்யவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

டுவிட்டரில் தொலைபேசி இலக்கம் இல்லாமல் ஆடியோ, வீடியோ காலில் பேசும் வசதியை அந்நிறுவனம் கொண்டு வருகின்றது.

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கியதில் இருந்து, இதனை லாபகரமாக மாற்றுவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...

பெங்களூரு அணி 218 ரன்கள் குவிப்பு: பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெறுமா சென்னை?

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு...