டுவிட்டர் தலைமையகத்தில் எக்ஸ் சின்னம் நீக்கம்

Date:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்பிரான்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்டு டுவிட்டர் நிறுவனம் செயல்படுகின்றது.

இந்த நிறுவனத்தை உலக பணக்காரர்களுள் ஒருவரான எலான் மஸ்க் வாங்கியது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.

டுவிட்டர் செயலியின் பெயரை எக்ஸ் என மாற்றினார். அதேபோல் பல ஆண்டுகளாக அதன் அடையாளமாக இருந்த நீலப்பறவையை மாற்றி எக்ஸ் என்ற லோகோவை கொண்டு வந்தார்.

இந் நிலையில் எக்ஸ் என்ற ஒளிரும் சின்னம் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலக கட்டிடத்தின் மேற்கூரையில் பொருத்தப்பட்டது.

ஆனால் இது பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக ஒரே நாளில் 24 முறைபாடுகள் சென்றன.

மேலும் நகர நிர்வாகத்திடம் இதற்கு உரிய அனுமதியும் பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் இந்த எக்ஸ் சின்னம் அங்கிருந்து அகற்றப்பட்டது.

பாதசாரிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சான்பிரான்சிஸ்கோ நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...