துருக்கியில் சட்ட விரோதமாக குடியேறிய 35 ஆயிரம் பேருக்கு நேர்ந்த கதி

Date:

துருக்கிக்கு அண்டை நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 35 ஆயிரம் புலம் பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

16 ஆயிரத்து 18 பேர் நாடு கடத்தப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

 

சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்காணிப்பதற்காக புலம்பெயர்ந்தோர் மேலாண்மை அலுவலகத்தின் 9 நடமாடும் மையங்கள் இஸ்தான்புல் நகரில் நிறுவப்பட்டுள்ளது.

 

அங்கு புலம்பெயர்ந்தோரின் கை ரேகை உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

 

விரைவில் இதனை 39 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...