பணத்தை வௌிநாடுகளில் பதுக்கியவர்களுக்கு சிக்கல்

Date:

மோசடியாக சொத்துக்களை ஈட்டி வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் நபர்களின் பணத்தை மீட்பதற்கான உதவிகளை வழங்க போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் இணக்கம் வௌியிட்டுள்ளது.

இதன்படி, குறித்த பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படும் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் தெற்காசிய பிராந்திய பிரதிநிதி மார்கோ டீக்சீராவுக்கும், அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இது தொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அவ்வாறு ஈட்டுப்பட்ட பணத்தை வெளிநாடுகளில் வைப்பு செய்தவர்களிடம் இருந்து பணத்தை மீட்பது தொடர்பில் உலக வங்கியின் சார்பில்  போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் செயற்படுகிறது.

எதிர்வரும் 15ஆம் திகதி புதிய ஊழல் ஒழிப்புச் சட்டம் அமுலுக்கு வரவுள்ள நிலையில் புதிய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் அவ்வாறானவர்கள் தொடர்பில்  செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...

பெங்களூரு அணி 218 ரன்கள் குவிப்பு: பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெறுமா சென்னை?

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு...