பரபரப்பான போட்டியில் இந்தியா அபார வெற்றி

Date:

15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் குரூப்1 பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும், குரூப்2 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

இந்நிலையில் இந்த தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் பெனோனியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களை குவித்தது. அந்த அணி சார்பில் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 76 ரன்களையும், ரிச்சர்ட் செலட்ஸ்வேன் 64 ரன்களையும் சேர்த்தனர்.

இந்தியா சார்பில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகளையும், முஷீர் கான் 2 விக்கெட்டுகளையும், நர்மன் திவாரி மற்றும் பாண்டே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 245 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

இந்திய அணியின் துவக்க வீரர்களான ஆதார்ஷ் சிங் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இவருடன் களமிறங்கிய அர்ஷின் குல்கர்னி 12 ரன்களிலும், அடுத்து வந்த முஷீர் கான் 4 ரன்களிலும், பிரியன்ஷூ மொலியா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக இந்திய அணி தடுமாறியது.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், மறுபக்கம் கேப்டன் உதய் சஹாரன் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார். இவர் 69 ரன்களை குவித்த நிலையில், இவருடன் ஆடிய சச்சின் தாஸ் அதிரடியாக விளையாடி 96 ரன்களை குவித்தார்.

போட்டி முடிவில் இந்திய அணி 48.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களை குவித்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜ் லிம்பானி 13 ரன்களுடனும், நமன் திவாரி ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி சார்பில் உதய் சஹாரன் 81 ரன்களையும், சச்சின் தாஸ் 96 ரன்களையும் விளாசினார்.

இந்த வெற்றி மூலம் இந்திய அணி U19 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இறுதி போட்டி பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற இருக்கிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...