பாடசாலையில் நடந்த மர்மம்.. ஒரே நேரத்தில் பிளேடால் வெட்டிக்கொண்ட 14 மாணவிகள்.. காரணம் தெரியுமா?

Date:

ஒரே நேரத்தில் 14 பாடசாலை மாணவிகள் தங்கள் கைகளை பிளேடால் வெட்டிக் கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக வெளிவந்துள்ள சில பின்னணி தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கர்நாடகாவின் கார்வார் மாவட்டம் தண்டேலியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த 14 மாணவிகள் சனிக்கிழமையன்று தங்கள் இடது கைகளை வெட்டிக்கொண்டனர்.

சனிக்கிழமையன்று பொதுவாக மதியம் வரை மட்டுமே பாடசாலைகள் செயல்படும் என்பதால் அதற்கு பின்னர் 14 மாணவிகளும், இடது கை மணிக்கட்டு பகுதியில் பிளேடு போன்ற கூர்மையான ஆயுதத்தால் வெட்டிக் கொண்டார்கள்.

அவர்கள் வீடு திரும்பியபோது அதைப் பார்த்த பெற்றோர் பெரும் அதிர்ச்சியடைந்து அது சம்பந்தமாக ஆசிரியர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதை கேட்ட ஆசிரியர்களுக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

யார் அல்லது எந்த விஷயம் இப்படி கூட்டாக கைகளை வெட்டிக் கொள்ள தூண்டியது குறித்து மாவட்ட ஆட்சியர் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. 14 சிறுமிகளும் தங்களது இடது கை மணிக்கட்டு பகுதியில் பிளேடால் வெட்டியுள்ளனர்.

அவர்களில் சிலருக்கு 14 – 15 காயங்கள் இருந்துள்ளன. இந்த விவகாரம் நேற்று பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மாவட்ட நிர்வாகம் உத்தரவின்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைகளை வெட்டிக் கொண்ட சிறுமிகளுக்கு உயிர் பாதிப்பு ஏதும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

சிறுமிகளுக்கு உளவியல் நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அப்போது பெரும்பாலானோர் உண்மையை தெரிவிக்க மறுத்து விட்டனர் 2, 3 பேர் மட்டுமே காயத்தின் பின்னணி குறித்து கூறியுள்ளனர்.

ஒரு பெண் தன் தாயை புண்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக குற்ற உணர்ச்சியால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாகக் கூறியுள்ளார். அதை அவளுடைய தாயாரும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

மற்றொரு பெண் தனது மாமாவின் சமீபத்திய மரணத்தால் ஏற்பட்ட மன அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் கைகளை வெட்டிக் கொண்டதாக கூறினார். இன்னொரு பெண் தன்னிடம் பேசுவதை நிறுத்தியதால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாக மற்றொரு பெண் குறிப்பிட்டுள்ளார்.

காரணங்கள் பல இருந்தாலும் ஒரே நேரத்தில்  14 சிறுமிகளும் இந்த காரியத்தில் ஈடுபடுவார்களா, அதனை செய்ய யார் தூண்டியது என்ற கேள்விகளை சமூக ஆர்வலர்கள் முன் வைத்துள்ளனர். இந்த நிகழ்வு கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...