பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

Date:

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் இடம்பெற்று வருகின்றது.

களிமண் தரை போட்டியான இதில் 2-வது சுற்று போட்டிகள் நடைபெற்றன.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச், ஹங்கேரி வீரர் மார்ட்டன் பியூசோவிக்சுடன் மோதினார்.

முதல் செட்டை 7-6 என கைப்பற்றிய ஜோகோவிச் இரண்டாவது செட்டை 6-0 எனவும், மூன்றாவது செட்டை 6-3 என வென்று அடுத்த சுற்றையும் உறுதி செய்தார்.

மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஜப்பான் வீரர் டாரோ டேனியலுடன் மோதினார். இதில் முதல் செட்டை அல்காரஸ் 6-1 என வெற்றி பெற்றார்.

2-வது செட்டை டேனியல் 6-3 என வெற்றி பெற்றார். இதையடுத்து அல்காரஸ் 3-வது மற்றும் 4-வது செட்டை 6-1, 6-2 என வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...