பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையால் பிரபல நடிகை பலி

Date:

அர்ஜென்டினாவை சேர்ந்த பிரபல நடிகை சில்வினா லூனா. மாடல் அழகியான இவர் தொலைக்காட்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.

இவர் கடந்த 2011-ம் ஆண்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். இதற்கிடையே இந்த அறுவை சிகிச்சை காரணமாக அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

வாரத்திற்கு 3 முறை டயாலிசிஸ் சிகிச்சை மேற் கொண்டார். ஆனால் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வந்ததால் உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில் நடிகை சில்வினா லூனா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். சில்வினா லூனா, பிளாஸ் டிக் சர்ஜரிக்காக ஒப்பனை அறுவை சிகிச்சை நிபுணர் அனிபால்லோ டோக்சி என்பவரை அணுகியுள்ளார்.

அறுவை சிகிச்சையின் போது சில்வினாவுக்கு அர்ஜென்டினா அரசால் தடை செய்யப்பட்ட மருந்தை செலுத்தியதாகவும் இதனால் அவர் பாதிப்பு அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அனிபால் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு உள்ளார்.அர்ஜென்டினாவில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையால் பிரபல நடிகை பலி

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...

பெங்களூரு அணி 218 ரன்கள் குவிப்பு: பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெறுமா சென்னை?

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு...