பேராதனை பல்கலைக்கழகத்தில் மலையகம் 200 ஆய்வு மாநாடு

Date:

பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறையின் ஏற்பாட்டில் மலையகம் 200 ஆய்வு மாநாடு பல்கலைக்கழக கலை பீடக் கருத்தரங்கு மண்டத்தில் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பேராதனைப் பல்கலைக்கழக பொருளியல் துறைப் பேராசிரியர் ச. விஜேசந்திரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நாவலப்பிட்டி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் அறங்காவலர் முத்தையாப்பிள்ளை ஸ்ரீகாந்தன் கலந்துகொண்டார்.

மலையகம் 200 ஆய்வு மாநாட்டின் முதல் அமர்வு கோ. நடேசையர் மீனாட்சியம்மாள் அரங்கு பேராசிரியர் எம். ஏ. நுஹ்மான் தலைமையில் இடம்பெற்றது. இதில் பேராதனைப் பல்கலைக்கழக பிரதம நூலகர் ஆர். மகேஸ்வரன், பிரபல எழுத்தாளரும் ஆய்வாளருமான ரா. நித்தியானந்தன், ஆய்வாளர் எல். ஜோதிகுமார், எழுத்தாளர் மு. சிவலிங்கம் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

சி. வி. வேலுப்பிள்ளை அரங்கு பேராதனை பல்கலைக்கழக தமிழ்த் துறை விரிவுரையாளர் கலாநிதி சோதி மலர் ரவீந்திரன் தலைமையில் ஆய்வாளர் ந. சரவணன், கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகம் கவிஞர் சு. முரளிதரன், ஆய்வாளர் மல்லிகைப்புச் சந்தி திலகர் ஆய்வாளர் மு. காளிதாஸ் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

பேராசிரியர் அருணாசலம் அரங்கு சாரல் நாடன் அரங்கு போன்ற பெயர்களில் ஆய்வாளர்கள் மலையகம் குறித்த பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார்கள்.

இதன் போது சு. தவச்செல்வன் எழுதிய இரு வருடகால மலையகமும் இலக்கியமும் ஒரு காலக் கணக்கெடுப்பு என்னும் நூல் வெளியீட்டு விழாவும் இடம்பெற்றது.

இதில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எழுத்தாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...