மாணவியை விடுதிக்கு அழைத்த ஆசிரியருக்கு விளக்கமறியல்

Date:

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ பிரதேசத்தில் பிரபல பாடசாலையின் ஆசிரியர் விடுதியில் வைத்து கைது செய்யப்பட்ட ஆசிரியரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

(16) நேற்று குறித்த ஆசிரியரை ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவானினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது 15 ஆம் திகதி மாலை தரம் 10ல் கல்வி பயிலும் மாணவி ஒருவரை குறித்த பாடசாலையின் ஆசிரியர் தனது விடுதிக்கு மாலை வேலையில் வருமாறு கூறியதை அடுத்து ஆசிரியரின் வார்த்தையை ​கேட்டு சென்ற மாணவியிடம் தகாத வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தை அறிந்த பிரதேச மக்கள் ஆசிரியரை மடக்கி பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து குறித்த சிறுமியை வரவழைத்து முறைப்பாட்டினை பதிவு செய்த பொலிஸார் ஆசிரியரை கைது செய்தனர்.

பொகவந்தலாவ பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் 14 வயது மாணவியை தனது விடுதிக்கு வருமாறு கூறி குறித்த சிறுமியை படுக்கயறைக்கு செல்லுமாறு பணிபித்த ஆசிரியர் சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சித்தாக சிறுமி பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் இருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 14 வயது சிறுமி சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்காக டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...