முதலாவது T20 தொடர் – நியூசிலாந்து அணி அபார வெற்றி

Date:

ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகின்றது.

முதலாவது போட்டி டுபாயில் நேற்றிரவு இடம்பெற்றது. இதில் முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து 6 விக்கெட்டுக்கு 155 ஓட்டங்களை சேர்த்தது.

அதிகபட்சமாக டிம் செய்பெர்ட் 55 ஓட்டங்களும், கோலே மெக்கோன்சி 31 ஓட்டங்களும் எடுத்தனர்.

அடுத்து களம் இறங்கிய ஐக்கிய அரபு அமீரகம் 19.4 ஓவர்களில் 136 ஓட்டத்தில் ஒல்-அவுட் ஆனது.

இதன் மூலம் நியூசிலாந்து 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் அரியான்ஷ் ஷர்மா அரைசதம் (60 ஓட்டம், 43 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசியும் பலன் இல்லை. நியூசிலாந்தின் அணித்தலைவர், வேகப்பந்து வீச்சாளருமான டிம் சவுதி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை இடம்பெறவுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...