மும்பைக்கு எதிரான மேட்ச்சில் லக்னோ அணி 177 ரன்கள் குவிப்பு

Date:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ள லக்னோ அணி 177 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடத் தொடங்கியுள்ளனர்.

லக்னோவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக தீபக் ஹூடா மற்றும் குவின்டன் டி காக் களத்தில் இறங்கினர்.

தீபக் ஹூடா 5 ரன்கள் எடுத்திருந்தபோது பெரன்டாஃப் பந்துவீச்சில் டிம் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரிரக் மன்காட் பெரன்டாஃப் வீசிய முதல் பந்திலேயே இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

சிறிது நேரம் தாக்குப் பிடித்த குவின்டன் டி காக் 16 ரன்கள் எடுத்திருந்தபோது, பியூஷ் சாவ்லாவின் சுழலில் விக்கெட்டை பறி கொடுத்தார். இதனால் 6.1 ஓவரில் லக்னோ அணி 35 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்திருந்தது.

இதையடுத்து இணைந்த கேப்டன் க்ருணல் பாண்ட்யா மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. 42 பந்துகளில் 49 ரன்கள் எடுத்திருந்தபோது க்ருணல் பாண்ட்யா ரிட்டையர்ட் ஹர்ட் என்ற முறையில் வெளியேறினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஸ்டாய்னிஸ் 47 பந்துகளில் 8 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.

20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 177 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...