யாருக்கெல்லாம் பிளே ஆஃப் வாய்ப்பு? யாரெல்லாம் அடுத்தடுத்த போட்டிகளில் ஜெயிக்க வேண்டும்?

Date:

குஜராத் டைட்டன்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 8ல் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்புக்காக போராடி வருகின்றன. அதில் யாருக்கெல்லாம் பிளே ஆஃப் வாய்ப்பு அமையும்? யாரெல்லாம் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க.

டெல்லி கேபிடல்ஸ்:

டெல்லி கேபிடல்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி மீதமுள்ள 4 போட்டிகளில் கண்டிப்பாக வெற்றி பெற்றால் 8 புள்ளிகள் பெற்று மொத்தமாக 16 புள்ளிகள் பெறும். இதன் மூலமாக டெல்லிக்கு இன்னமும் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பிருக்கிறது.

டெல்லிக்கான எஞ்சிய போட்டிகள்:

மே 10 – சென்னை சுப்பர் கிங்ஸ்

மே 13 – பஞ்சாப் கிங்ஸ்

மே 17 – பஞ்சாப் கிங்ஸ்

மே 20 – சென்னை சூப்பர் கிங்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்:

இதுவரையில் விளையாடிய 11 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் இருக்கிறது. இதற்கு முன்னதாக நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது கடைசி பந்தில் தோல்வி அடைந்த ராஜஸ்தான் தனது 3ஆவது இடத்திற்கான வாய்ப்பை இழந்தது. இன்று மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி ஜெயித்தாலும் ராஜஸ்தான் 6ஆவது இடத்திற்கோ அல்லது அதற்கு கீழேயோ செல்லும் நிலை ஏற்படும். எனினும், இனி வரும் போட்டிகளில் கண்டிப்பாக ராஜஸ்தான் ஜெயித்தால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு அமையும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான போட்டிகள்:

மே 11 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
மே 14 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
மே 19 – பஞ்சாப் கிங்ஸ்

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியி தோல்வி அடைந்து 11 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் இருக்கும் லக்னோ அணிக்கு இன்னும் சிக்கல் நீடிக்கிறது. ஏனென்றால், 3ஆவது இடத்திற்கான வாய்ப்பு ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், சிஎஸ்கே, ஆர்ஆர் அகிய அணிகளுக்கும் உண்டு. ஆதலால், 3ஆவது இடத்திற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டு பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்வதற்கு லக்னோ கண்டிப்பாக எஞ்சிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். ஒரு போட்டியில் தோற்றால் கூட பிளே ஆஃப் வாய்ப்பு கனவாக போய்விடும்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கான போட்டிகள்:

மே 13 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
மே 16 – மும்பை இந்தியன்ஸ்
மே 20- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்:

தற்போது 6 போட்டிகளில் வெற்றி பெற்று 13 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் 3 போட்டிகள் உள்ளது. இதில், 2 போட்டியில் வெற்றி பெற்றால் கூட சென்னை அணியின் பிளே ஆஃப் சுற்று உறுதி செய்யப்படும்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

மே 10 – டெல்லி கேபிடல்ஸ்

மே 14 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

மே 20 – சென்னை சூப்பர் கிங்ஸ்

குஜராத் டைட்டன்ஸ்:

ஏற்கனவே பிளே ஆஃப் சுற்று கதவு வரை சென்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி 16 புள்ளிகளுடன் நமபர் ஒன் இடத்தில் உள்ளது. எஞ்சிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிளே ஆஃப் சுற்று உறுதி செய்யப்படும்.

குஜராத் டைட்டன்ஸ் போட்டிகள்:

மே 12 – மும்பை இந்தியன்ஸ்

மே 15 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

மே 21 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பஞ்சாப் கிங்ஸ்:

இதுவரையில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி உள்ளது. இன்னும் 3 போட்டிகளிலும் கண்டிப்பான முறையில் அதுவும் அதிக ரன் ரேட் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு அமையும்.

பஞ்சாப் கிங்ஸ் போட்டிகள்:

மே 13 – டெல்லி கேபிடல்ஸ்

மே 17 – டெல்லி கேபிடல்ஸ்

மே 19 – ராஜஸ்தான் ராயல்ஸ்

மும்பை இந்தியன்ஸ்:

தற்போது 10 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. எஞ்சிய 4 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றாலும் கூட நெட் ரன்ரேட் அடிப்படையில் மும்பையின் பிளே ஆஃப் சுற்று அமையும்.

மும்பை இந்தியன்ஸ் போட்டிகள்:

மே 9- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

மே 12 – குஜராத் டைட்டன்ஸ்

மே 16 – லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்

மே 21 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் த்ரில் வெற்றி பெற்றதன் மூலமாக கொல்கத்தா பிளே ஆஃப் சுற்று வாசல் வரை வந்துள்ளது. தற்போது புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ள கேகேஆர் அணி எஞ்சிய 3 போட்டியிலும் வெற்றி பெற்றால் கூட மற்ற அணிகளின் புள்ளிகளைப் பொறுத்துதான் கேகேஆருக்கு வாய்ப்பு கிட்டும். எஞ்சிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் கேகேஆர் தோற்றால் கூட அதோடு கேகேஆர் வெளியேற வேண்டியது தான்.

மே 11 – ராஜஸ்தான் ராயல்ஸ்

மே 14 – சென்னை சூப்பர் கிங்ஸ்

மே 20 – லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

டெல்லிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3ஆவது இடத்திற்கு முன்னேறியிருக்கும். ஆனால், தோல்வி அடைந்து தற்போது 10 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் உள்ளது. எஞ்சிய 4 போட்டிகளிலும் ஆர்சிபி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பு மற்ற அணிகளைப் பொறுத்து அமையும்.

மே 9 – மும்பை இந்தியன்ஸ்

மே 14 – ராஜஸ்தான் ராயல்ஸ்

மே 18 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

மே 21 – குஜராத் டைட்டன்ஸ்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் ஹைதராபாத் த்ரில் வெற்றி பெற்றது. 8 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இன்னும் 4 போட்டிகள் உள்ளது. எஞ்சிய 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 16 புள்ளிகள் பெறும். எனினும், மற்ற அணிகளின் புள்ளிப்பட்டியல் மற்றும் நெட் ரன்ரேட் அடிப்படையில் வாய்ப்பு அமையும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

மே 13 – லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்

மே 15 – குஜராத் டைட்டன்ஸ்

மே 18 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

மே 21 – மும்பை இந்தியன்ஸ்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நான் ஹீரோ இல்ல… அவர்தான் ஹீரோ – சந்தானம்

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர்...

அடுத்த வருடம் மே மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்த திட்டம்

இந்தியா ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்துவது போல் பாகிஸ்தானும் பிஎஸ்எல்...

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது- ஷேன் வாட்சன்

வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான...

13.4 ஒவரில் இலக்கை எட்டி ஆர்சிபி அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு...