ரத்தம் தெறிக்க.. தீப்பொறி பறக்க.. வெளியான சூர்யா பட டைட்டில்

Date:

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து சூர்யாவின் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் ஜி.வி. பிரகாஷின் 100-வது படமாகும்.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு ‘புறநானூறு’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. ரத்தம் தெறிக்க.. தீப்பொறி பறக்க.. சூர்யா தோன்றும் இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...

பெங்களூரு அணி 218 ரன்கள் குவிப்பு: பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெறுமா சென்னை?

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு...