லக்னோவுக்கு எதிராக சென்னை அணி அதிரடி

Date:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் துடுப்பாட்டம் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 217 ஓட்டங்களை  எடுத்துள்ளது.

இன்றைய ஆட்டத்தில் முதலில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ அணி பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஆகியோர் களத்தில் இறங்கினர். கடந்த போட்டியை விட இந்த போட்டியில் சென்னை அணி அதிரடியான துடுப்பாட்டம் வெளிப்படுத்தியது.

தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வேயின் சிறப்பான இணைப்பாட்டத்தினால் 9 ஓவரில் அணி 110 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளையில், ருதுராஜ் கெய்க்வாட் 31 பந்துகளை எதிர்கொண்ட கெய்கவாட் 4 சிக்சர் மற்றும் 3 பவுண்டரியுடன் 57 ஓட்டங்களுடன் ஆடுகளத்தினை விட்டு வெளியேறினார்.

கான்வே 29 பந்தில் 47 ஓட்டங்களும், அடுத்து வந்த ஷிவம் துபே 16 பந்தில் 27 ஓட்டங்கள் எடுத்தனர். ரவிந்திர ஜடேஜா 3 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். தான் எதிர்கொண்ட முதல் 2 பந்தில் சிக்சர் அடித்த அணித்தலைவர் தோனி 3 ஆவது பந்தில் ஆட்டமிழந்தார்.

லக்னோ அணி சார்பாக மார் வூட் மற்றும் ரவி பிஸ்னோய் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 217 ஓட்டங்களை எடுத்துள்ளது. இதையடுத்து 218 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி விளையாடி வருகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...