லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆர்.சி.பி.

Date:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

கடந்த சில போட்டிகளில் ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி இன்றைய போட்டியில் மாற்றப்பட்டு மீண்டும் கேப்டன் பொறுப்பை டூப்ளசிஸ் ஏற்றுக் கொண்டார். டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரர்கள் விராட் கோலி 31 ரன்களும், டூப்ளசிஸ் 44 ரன்களும் எடுத்தனர். தினேஷ் கார்த்திக் 16 ரன்கள் ஆட்டமிழக்க மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கில் வெளியேறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 126 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி பெங்களூரு அணி களத்தில் இறங்கியது. ஃபீல்டிங்கின்போது காயம் ஏற்பட்டதால் லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கவில்லை.

அவருக்கு பதிலாக ஓபனிங் பேட்டிங் செய்த ஆயுஷ் பதோனி 4 ரன்னிலும், கைல் மேயர்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். க்ருணல் பாண்ட்யா 14 ரன்களும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 13 ரன்களும் எடுக்க கிருஷ்ணப்பா கவுதம் மட்டும் சிறிது நேரம் தாக்குப் பிடித்து 2 சிக்சர்களுடன் 23 ரன்கள் சேர்த்தார்.

அமித் மிஷ்ரா 19 ரன்னும், நவீன் உல் ஹக் 13 ரன்களும் சேர்க்க 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த லக்னோ அணி 108 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...