வடகொரியா ஏவிய இராணுவ உளவு செயற்கைகோள் மீண்டும் தோல்வி

Date:

வடகொரியா, கடந்த மே மாதம் இராணுவ உளவு செயற்கைகோளை விண்ணில் ஏவியது. குறித்த திட்டம் அது தோல்வியில் முடிந்தது.

செயற்கைகோளை சுமந்து சென்ற ரொக்கெட் வெடித்து கடலில் விழுந்தது. இந்நிலையில் இன்று 2-வது முறையாக இராணுவ உளவு செயற்கை கோளை வடகொரியா ஏவியது.

ஆனால் இதுவும் தோல்வி அடைந்தது. வட கொரியாவின் தேசிய விண்வெளி மேம்பாட்டு நிர்வாகம் இன்று அதிகாலை மல்லிஜியாங்-1 என்ற புதிய வகை ரொக்கெட்டில் சோஹே செயற்கைகோளை விண்ணில் ஏவியது.

ரொக்கெட்டின் முதல் மற்றும் 2-ம் நிலைகளின் விமானங்கள் இயல்பாக செயற்பட்டன.

ஆனால் 3-ம் கட்டத்தில் அவசர வெடிப்பு அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏவுதல் தோல்வி அடைந்தது என வடகொரியா தெரிவித்துள்ளது.

மேலும், இந்த தகவலுக்கான காரணம் ஒரு பெரிய பிரச்சனை இல்லை என்றும் சிக்கலை ஆராய்ந்து அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு. ஒக்டோபர் மாதம் மீண்டும் செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் என தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...