லிந்துலை – லோகி தோட்டத்திலுள்ள குளத்தில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட பெண் இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், குழந்தையும் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
லோகி தோட்டத்தைச் சேர்ந்த 26 வயதுடைய மகாமணி தயானி என்பவரே இவ்வாறு குளத்தில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
மேலும், திருமண பதிவு அட்டை, தேசிய அடையாள அட்டை மற்றும் ஐந்து பக்கங்களை கொண்ட கடிதம் ஆகியனவற்றையும் குளத்துக்கு அருகிலிருந்து மீட்டுள்ளதாக லிந்துலை காவல் நிலைய பொறுப்பதிகாரி எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.
தன்னையும், தனது குழந்தையையும் கணவரும், அவரின் உறவினர்களும் துன்புறுத்தினர் என அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது என காவல் துறையினர் தெரிவித்தனர்.
மீட்கப்பட்டுள்ள தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.




