பிரிக்ஸ் கூட்டமைப்பில் மேலும் 6 புதிய நாடுகள் இணைகின்றன

Date:

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ மாநாடு நேற்று முன்தினம் தென்ஆப்பிரிக்க நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் தொடங்கியது.

இது 3 நாள் மாநாடு ஆகும். கொரோனா காரணமாக, 3 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி நிகழ்வாக மாநாடு நடக்கிறது. தென்ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அழைப்பின்பேரில், மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று முன்தினம் தென்ஆப்பிரிக்கா சென்றார்.

அவரை அந்நாட்டு துணை அதிபர் வரவேற்றார். பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 புதிய நாடுகள் இணைய உள்ளதாக தென்ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அறிவித்துள்ளார்.

அர்ஜெண்டினா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளை பிரிக்ஸ் அமைப்பில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அர்ஜெண்டினா, எகிப்து, எதோப்பியா, ஈரான், சவுதி மற்றும் ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினராக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 2024 ஜனவரி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே சந்திரயான் 3 வெற்றிக்கு பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற உலக நாட்டு தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....