வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தற்போது கையிருப்பில் உள்ள அரிசி, அடுத்த பெரும்போக அறுவடை வரை போதுமானதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு தேவையான மூன்று வகையான உரங்களை உரிய நேரத்தில் வழங்கியதாலும் நிதி உதவி அளித்ததாலும் கடந்த பெரும் போகம் வெற்றியளித்ததாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.




