பண்டாரவளை பகுதியில் உள்ள விடுதியொன்றில் இருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எட்டம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
சம்பவத்துடன், தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




