ஆசிய கிண்ணம் 2023 ; முதல் வெற்றியை சுவீகரித்தது இலங்கை

Date:

ஆசிய கோப்பை 2023 தொடரின் இரண்டாவது போட்டியில் பங்காளதேஷ் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற பங்காளதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. பங்காளதேஷ் அணியின் துவக்க வீரர்கள் முகமது நைம் மற்றும் தம்சித் ஹாசன் முறையே 16 ஓட்டங்கள் மற்றும் டக் அவுட் ஆகி வெளியேறினர்.

இவர்களை தொடர்ந்து களமிறங்கிய நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 89 ஓட்டங்களை அடித்தார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இவரை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக பங்காளதேஷ் அணி 42.4 ஓவர்களில் வெறும் 164 ஓட்டகளை குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

165 என்ற வெற்றியிலக்கினை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. இலங்கை அணியின் துவக்க வீரர்களான பெத்தும் நிசங்க மற்றும் திமுத் கருணரத்ன முறையே 14 மற்றும் 1 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆகினர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் 5 ஓட்டங்களுக்கு அவுட் ஆனார். சதீர சமரவிக்ரமவின் நிதனமான துடுப்பாட்டத்தில் 54 ஓட்டங்களை குவித்தார்.

இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய சரித் அசலங்க கடைசி வரை ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களை குவித்தார். இதில் ஐந்து பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். இதன் மூலம் இலங்கை அணி 39 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....