நோபல்பரிசு விழாவில் பங்கேற்க ரஷியா-பெலாரஸ் நாடுகளுக்கு அழைப்பு இல்லை

Date:

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்த ஆண்டுக்கான நோபல்பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்க ரஷியா, பெலாரஸ், ஈரான் ஆகிய நாடுகளுக்கும் அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கு சுவீடனை சேர்ந்த பல எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து நோபல் பரிசு வழங்கும் விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.

உக்ரைன் மீதான போர் மற்றும் சுவீடன் நேட்டோ அமைப்பில் இணைய ரஷியா எதிர்ப்பது ஆகியவை காரணமாக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடும் எதிர்ப்பு காரணமாக நோபல்பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்க ரஷியா-பெலாரஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு விடுத்த அழைப்பை நோபல் அறக்கட்டளை திரும்ப பெற்றுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....